உலகின் மிகப்பெரிய போர்க்களமாக இமயமலையில் உள்ள சியாச்சின் பனிமலை கருதப்படுகிறது. இங்கு இந்திய ராணுவ வீரர்கள் 24 மணிநேரமும் கடும் குளிரிலும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சியாச்சின் பனிமலையில் 38 ஆண்டுகளுக்கு முன்பு மாயமான இந்திய ராணுவ வீரரின் உடலை ராணுவத்தினர் மீட்டுள்ளனர்.


பனியில் சிக்கியிருந்து கிடைத்த அவரது உடலை ராணுவத்தினர் மீட்டதை அடுத்து, அவரது உடலில் இருந்த கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் ராணுவ வீரர் லான்ஸ் நாயக் சந்திரசேகர் ஹர்போல் என்பதை கண்டுபிடித்தனர். அவர் இந்திய ராணுவத்தின் குமாவுன் ரிஜிமெண்ட்டில் பணியாற்றி வந்தவர் என்பதையும் கண்டுபிடித்தனர்.




பனியில் கண்டுபிடிக்கப்பட்ட சந்திரேசகர் ஹர்போல் 1971ம் ஆண்டு குமாவுன் ரிஜிமெண்ட்டில் சேர்ந்தார். 1984ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற ஆபரேஷன் மெகதூத்தின் போது சந்திரசேகர் ஹர்போல் உள்பட 5 ராணுவ வீரர்கள் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக போராடியபோது மாயமாகினர்.


மேலும் படிக்க : தேசப்பற்றுனா இப்படி இருக்கணும்... கொடியேற்றி கவனம் ஈர்த்த வயதான தம்பதி... ட்வீட் செய்து மகிழ்ந்த ஆனந்த் மஹிந்திரா!


இந்த நிலையில்தான், நாட்டிற்காக போரிட்டபோது மாயமாகிய ராணுவ வீரர் சந்திரசேகர் ஹர்போல் உடல் பனியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 38 ஆண்டுகளுக்கு முன்பு மாயமாகிய தனது கணவரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறித்து அவரது மனைவி சாந்தி தேவி அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.




இதுதொடர்பாக, அவர் கூறியதாவது, “சுமார் 38 ஆண்டுகள் ஆகிவிட்டது. எங்கள் இருவருக்கும் 1975ம் ஆண்டு திருமணம் ஆகியது. எனக்கு 25 ஆகியபோது அவர் காணாமல் போனார். அவர் காணாமல் போனபோது எங்களுக்கு இரு மகள்கள் இருந்தனர். ஒருவருக்கு ஒன்பது வயது. மற்றொருவருக்கு நாலரை வயது.


பின்னர், எனது வாழ்க்கையை எனது குழந்தைகளை வளர்ப்பதிலே கவனம் செலுத்தினேன். ஒரு தாயாகவும், ஒரு துணிச்சலனா தியாகியின் மனைவியாகவும் பெருமைப்படுகிறேன்” என்று கூறியுள்ளார். இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு வரும் என்று கருதப்படுகிறது. சந்திரேசகர் ஹர்போல் மகள்கள் தங்களது தந்தை உடல் இத்தனை ஆண்டுகள் கழித்து கண்டெடுக்கப்படும் என்று கருதவில்லை என்று கூறியதுடன், அவரது இறுதிச்சடங்கை முறைப்படி நடத்த உள்ளதாக கூறியுள்ளார். அவரது இறுதிச்சடங்கில் அவருக்கு மிகப்பெரிய அளவில் நடத்த அந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.


இந்திய ராணுவத்திற்காக போரிட்டபோது மாயமாகிய வீரரின் உடல் 38 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க : Todays News Headlines: முதலமைச்சர் டெல்லி பயணம்..பீகார் அமைச்சரவை விரிவாக்கம்..இன்னும் பல செய்திகள்..


மேலும் படிக்க : Independence Day 2022: 750 சதுர அடியில் பிரம்மாண்டமாக... ஓராண்டு பயணித்து ஸ்ரீநகரில் காட்சிப்படுத்தப்பட்ட தேசியக்கொடி!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண