காலையில் சோசியல் மீடியா பக்கங்களை திறந்ததில் இருந்து அதிக கவனம் பெற்றது #ReleaseIrfanPathan என்ற ஹேஸ்டேக்தான். இதைப்பார்த்த பெரும்பாலான இந்தியர்கள் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் என்று எண்ணிக்கொண்டு என்ன விவரம் என்று கூகுள் பக்கத்தில் தேடத் தொடங்கினர். 


தேடிய பிறகுதான் தெரிந்தது அது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இல்லை. உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த இர்பான் பதான் என்று. 






யார் இந்த இர்பான் பதான்..? 


முகமது நபிக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகள் சர்ச்சையில், இடைநீக்கம் செய்யப்பட்ட பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக வன்முறைக்கு இர்பான் பதான் தூண்டியதாக உ.பி காவல்துறை குற்றம் சாட்டி கடந்த இரண்டு நாட்கள் முன்பு கைது செய்தது. இர்பான் பதான் அசாதுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீனுடன் தொடர்புடையவர், மேலும் இந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தண்டா தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.


இதை அறிந்து ஒரு புறம் கிரிக்கெட் ரசிகர்கள் ’அப்பாடா’ என்று பெருமூச்சு விட, மறுபுறம் நெட்டிசன்கள் வழக்கம்போல் கலாய்க்க தொடங்கி விட்டனர். 


அதில் ஒரு சில ட்வீட்கள் : 


















 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண