Uttar Pradesh; உத்தரப் பிரதேசத்தில் நான்கு வயது குழந்தை பாலியல் வல்லுறவிற்கு ஆளாக்கப்பட்ட கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது குழந்தை மருத்துவமனையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கிறது. 


நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகமாகி வருகின்றன. குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தினமும் நாட்டில் எங்கேனும் ஒரு பகுதியில் நடந்த வண்ணம் இருக்கின்றது. இதில் நேற்று நடந்திருக்கும் சம்பவம் மிகவும் கவலை அளிப்பதாக இருக்கின்றது. 


உத்தரப்பிரதேசத மாநிலத்தில் உள்ள பாந்தா மாவட்டத்தில் நான்கு வயது குழந்தை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. பாந்தா மாவட்டம் நரைனி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் தான் இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது. பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட நான்கு வயது குழந்தை தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் குழந்தை அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், குழந்தையினை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள  ஃபரித் என்பவரை, நரைனி காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


வெள்ளிக்கிழமை, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டு இருந்த குழந்தையை கடத்தி செல்லப்பட்டு பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை காவல் துறைக்கு இந்த கொடூர சம்பவம் தெரிய வர, பாலியல் குற்றம் சாட்டப்பட்ட ஃபரித் என்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.  கைது செய்யப்பட்டுள்ள ஃபரித் மீது காவல் துறையினர், உரிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், போக்சோ (Protection of Children from Sexual Offences) சட்டத்தின் கீழும் வழக்கு பதியப்பட்டுள்ளது. 


பாஜக ஆளும் உத்திர பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகமாகி வருகின்றது. கடந்த 2020 ஆண்டு கண்க்குப் படி நாட்டிலேயே ராஜஸ்தான் மாநிலத்தில் தான் அதிகப்படியான பாலியல் குற்றங்கள் நிகழ்ந்துள்ளது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்த புள்ளி விபரங்களின் படி, 5,310 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு ராஜஸ்தான் மாநிலம் முதல் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து, 2,769 பதிவு செய்யப்பட்ட குற்றங்களோடு உத்திர பிரதேசம் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த வரிசையில் 389 பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்களோடு தமிழ்நாடு 20வது இடத்தில் உள்ளது எனும் உண்மை கவலை அளிப்பதாக உள்ளது.   




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண