தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது ஏற்பட்ட சர்ச்சை குறித்து ரிசர்வ் வங்கி விளக்கமளித்துள்ளது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் தமிழ்நாட்டின் மாநில பாடல் என்பதை உணர்வதாகவும் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.


இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை:


கடந்த ஜனவரி 26ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கியின் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 73-வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது நிகழ்ந்த நிகழ்வுகளில் தொடர்பில் இது வெளியிடப்படுகிறது. குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்கு மரியாதை செலுத்துவதன் அடையாளமாக  ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ பாடல் பாடப்பட்டது. எனினும், பின்னர் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பத்தில் பாடல் குறித்து சற்றும் எதிர்பாராத மற்றும் வருந்தத்தக்க சில தேவையற்ற கூற்றுக்கள் எழுப்பப்பட்டன.


தமிழ்த்தாய் வாழ்த்து தமிழ்நாட்டின் மாநிலப் பாடல் என்பதை நாங்கள் உணர்கிறோம். ஒரு ஒழுங்குமுறைப்படுத்தும் அமைப்பு என்கிற முறையில், நாங்கள்  நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் மற்றும் நடைமுறைகளை மதிக்கிறோம் என்பதை மீண்டும் தெரிவிக்க விரும்புகிறோம்.


இந்திய ரிசர்வ் வங்கி, சென்னை மண்டல அலுவலகத்தின் பிரதிநிதிகள், மண்டல இயக்குநர் எஸ்.எம்.என். சுவாமி தலைமையில் மதிப்பிற்குரிய தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை  சந்தித்து இதன் தொடர்பான எங்கள் நிலைபாட்டை உறுதி செய்தனர்.




முன்னதாக, , நிதியமைச்சர் பி.டிஆர். பழனிவேல் தியாகராஜனை சந்தித்து, ஆர்பிஐ அதிகாரிகளின் செயலுக்கு  மண்டல இயக்குநர் எஸ்.எம்.சாமி வருத்தம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதனிடையே, தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு எழுந்து நிற்காதவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் பலர் கோரிக்கை வைத்திருந்ததை அடுத்து, ரிசர்வ் வங்கி ஊழியர்கள் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ராஜேஷ் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறையில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண