Ratan Tata: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா உடல்நலக்குறைவால் காலமானார்.


ரத்தன் டாடா காலமானார்:


டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவரான ரத்தன் டாடா, தனது 86வது வயதில் மும்பை மருத்துவமனையில் புதன்கிழமை காலமானார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்ட நிலையில் சிகிச்சை பலனிம்றி உயிரிழந்தார்.


ரத்தன் டாடா தங்களது குழுமத்திற்கு தலைவர் என்பதை விட அதிகம் டாடா தெரிவித்துள்ளது. இதுதொடர்பான டிவிட்டர் பதிவில், "அவர் ஒரு ஆலோசகர், வழிகாட்டி, நண்பராக இருந்தார். அவர் முன்னுதாரணமாக செயல்படார். அவர் மிகவும் ஆர்வத்துடன் முன்வைத்த கொள்கைகளை நிலைநிறுத்த நாங்கள் பாடுபடும்போது அவரது மரபு தொடர்ந்து நம்மை ஊக்குவிக்கும்" என்று டாடா குழுமம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


டாடா குழும தலைவராக ரத்தன் டாடா பற்றி அறிய வேண்டியவை:



  • டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள்: தலைவரான ரத்தன் வயது தொடர்பான நோய்களுக்காக மும்பை ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முன்னதாக ரத்த அழுத்தம் குறைந்ததைத் தொடர்ந்து, திங்கட்கிழமை அதிகாலையும் அவர் மும்பையின் ப்ரீச் கேண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

  •  ரத்தன் டாடா, இந்தியாவில் தனக்கான இடத்த்தை கொண்ட ஒரு பெயர், மரியாதைக்குரிய தொழில்துறைத் தலைவராக மட்டுமல்லாமல் அவரது பரோபகாரத்திற்காகவும் அறியப்பட்டார்.

  • அவர் டிசம்பர் 28, 1937 இல் பம்பாயில் (இப்போது மும்பை) பிறந்தார். நாட்டின் மிகவும் பிரபலமான தொழிலதிபர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.

  • டாடா குழுமத்தை மார்ச் 1991 முதல் டிசம்பர் 2012 வரை, சால்ட்-டு-சாஃப்ட்வேர் குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் தலைவராக வழிநடத்தினார்

  • அவரது பதவிக் காலத்தில், டாடா குழுமத்தின் வருவாய் பன்மடங்கு வளர்ச்சியடைந்தது. 2011-12ல் மொத்த வருவாய் 100 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. ஓய்வுக்குப் பிறகு, டாடா சன்ஸ், டாடா இண்டஸ்ட்ரீஸ், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் ஆகியவற்றின் எமரிட்டஸ் தலைவர் என்ற கௌரவப் பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.

  • அவர் 1962 இல் டாடா குழுமத்தில் சேர்ந்தார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய பிறகு 1971 இல் தேசிய வானொலி மற்றும் மின்னணு நிறுவனத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார்

  • 1981 இல், டாடா குழுமத்தின் மற்ற ஹோல்டிங் நிறுவனமான டாடா இண்டஸ்ட்ரீஸின் தலைவராக நியமிக்கப்பட்டார். அங்கு, உயர் தொழில்நுட்ப வணிகங்களில் புதிய முயற்சிகளை ஊக்குவிப்பவராகவும் மாற்றுவதற்கு அவர் பொறுப்பேற்றார்.

  • அவருக்கு 2008 ஆம் ஆண்டில் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகனுக்கான விருதான பத்ம விபூஷண் வழங்கப்பட்டது. மேலும் அவர் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இருந்து கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

  • கார்னெல் பல்கலைக்கழகம் மற்றும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் அறங்காவலர் குழுவிலும் பணியாற்றியுள்ளார்.