Ratan Tata Business: டாடா குழுமத்தின் நிறுவனங்கள் 100-க்கும் அதிகமான நாடுகளில் பரந்து விரிந்து உள்ளது.
ரத்தன் டாடா மறைவு
இந்தியா தொழில்துறைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த நாட்டிற்குமான அடையாளமாகவும், பெருமையாகவும் திகழ்பவர் ரத்தன் டாடா. உடல் நலக்குறைவால் புதன்கிழமை அவர் காலமானார். சால் தொடங்கி சாஃப்ட்வேர் வரை, இன்று உலகளவில் ஆதிக்கம் செலுத்தி வரும் டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு ரத்தன் டாடாவின் பங்களிப்பு என்பது அளப்பரியது. இந்நிலையில், டாடா குழுமம் என்னென்ன துறைகளில் எந்தெந்த நாடுகளில் செயல்படுகிறது என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.
டாடா குழுமம்:
இந்தியாவில் டாடா குழுமம் என்பது நம்பகத்தன்மைக்கு மற்றொரு அடையாளமாக உள்ளது. இந்த பெரும் சாம்ராஜ்ஜியத்திற்கான 1868ம் ஆண்டு அடித்தளமிட்டவர் ஜம்செட்ஜி டாடா. அதன் விளைவான தற்போது, டாடா குழுமம் ஒரு உலகளாவிய நிறுவனமாக உள்ளது. இது இந்தியாவில் தலைமையிடமாக கொண்டு பத்து பிராந்தியங்களில் 30 நிறுவனங்களை உள்ளடக்கியுள்ளது. அதன்படி, டாடா குழுமமானது ஆறு கண்டங்களில் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்குகிறது, ”நம்பிக்கையுடன் கூடிய தலைமைத்துவத்தின் அடிப்படையில் நீண்டகால பங்குதாரர் மதிப்பு உருவாக்கம் மூலம், உலகளவில் நாங்கள் சேவை செய்யும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்' என்ற நோக்கத்துடன் டாடா குழுமம் செயல்படுகிறது.
டாடா அறக்கட்டளை:
டாடா சன்ஸ் முதன்மை முதலீட்டு நிறுவனமாகவும் டாடா நிறுவனங்களின் விளம்பரதாரராகவும் உள்ளது. டாடா சன்ஸ் நிறுவனத்தின் பங்கு மூலதனத்தில் அறுபத்தாறு சதவிகிதம் கல்வி, சுகாதாரம், வாழ்வாதார உருவாக்கம் மற்றும் கலை மற்றும் கலாச்சாரத்தை ஆதரிக்கும் பரோபகார அறக்கட்டளைகளால் நடத்தப்படுகிறது. 2023-24ல், டாடா நிறுவனங்களின் வருமானம், 165 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இருந்தது. இந்த நிறுவனங்கள் கூட்டாக 10 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்களை கொண்டுள்ளன. மார்ச் 31, 2024 நிலவரப்படி, 365 பில்லியன் டாலருக்கும் அதிகமான சந்தை மூலதனத்துடன் 26 பொதுப் பட்டியலில் உள்ள டாடா நிறுவனங்கள் உள்ளன.
பிரதான நிறுவன விவரங்கள்:
சால்ட் தொடங்கி சாஃப்ட்வேர் நிறுவனம் வரை தன்னகத்தே டாடா குழுமம் கொண்டுள்ளது என்பது பிரபலமான குறியீடாகும். அதன்படி, காபி, கார்கள், உப்பு,சாஃப்ட்வேர், எஃகு, ஆற்றல், விமான சேவை, இந்தியாவின் முதல் சூப்பர் ஆப் ஆகியவை டாடா குழுமத்தின் கீழ் உள்ளது. அண்மையில் சிப் தயாரிப்பில் இறங்கிய டாடா குழுமம் , ஆப்பிள் ஃபோன்களுக்கான அசெம்பிளி பிரிவிலும் கால் பதித்துள்ளது.
டாடா குழுமத்தின் தொழில் துறைகள்
- தொழில்நுட்பம்
- எஃகு
- ஆட்டோமொபைல்
- மொத்த & சில்லறை விற்பனை
- உட்கட்டமைப்பு
- நிதிசேவை
- எரோஸ்பேஸ் & பாதுகாப்பு
- சுற்றுலா & பயணம்
- டெலிகாம் & மீடியா
- டிரேடிங் & முதலீடு
டாடா குழுமத்தின் நிறுவனங்கள்:
- டாடா கன்சல்டன்ஸி சர்வீஸ்
- டாடா ஸ்டீல்
- டாடா மோட்டார்ஸ்
- டாடா கன்சூமர் புராடக்ட்ஸ்
- டாடா பவர்
- இந்தியன் ஹோட்டல்ஸ்
- டாடா கெமிக்கல்ஸ்
- டாடா கம்யூனிகேஷன்
- டாடா எல்க்ஸி
- டாடா டெலிசர்வீஸ்
- நெல்கோ
- டாடா இன்வெஸ்ட்மெண்ட் கார்ப்ரேஷன்
- டாடா ஆட்டோகாம்ப் சிஸ்டம்ஸ் லிமிடெட்
- டாடா பிளே
- ஜாகுவார் லேண்ட் ரோவர்
- டாடா டெக்னாலஜிஸ்
- ராலிஸ் இந்தியா
- ட்ரெண்ட்
- டைடன்
- டிசிஎஸ்
- வோல்டாஸ்
- இந்தியன் ஹோட்டல்ஸ் கம்பெனி
- டாடா காஃபி
- ஓரியண்டல் ஹோட்டல்ஸ்
- இன்ஃபினிட்டி ரிடெயில்
- டாடா புராஜெக்ட்ஸ்
- டாடா கன்சல்டிங் சர்வீஸ்
- டாடா ஹவுசிங்
- டாடா கேபிடல்
- டாடா அசெட்ஸ் மேனேஜ்மெண்ட்