Continues below advertisement

லவ் குஷ் ராம்லீலா கமிட்டி, வரவிருக்கும் ராம்லீலா நிகழ்ச்சியில் மண்டோதரியாகா பூனம் பாண்டேவை நடிக்க வைக்க முடிவு செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே:

இந்தி சினிமாவில கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் பூனம் பாண்டே. கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியன நஷா (Nasha) என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது கன்னடா,தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையின் போது இந்தியா உலகக் கோப்பையை வென்றால்  நிர்வாணமாக போஸ் கொடுப்பேன் என்று கூறி பரபரப்பை கிளப்பினார். தற்போது இவர் தன்னுடைய இணைய தளத்தில் ஆபாச புகைப்படங்களையும் பகிர்ந்து வருகிறார்.

Continues below advertisement

கடும் எதிர்ப்பு:

இதுவும் இவர் மீது ஒரு சர்ச்சையை கிளப்பியுள்ளது.இந்த நிலையில் டெல்லியில் புகழ்பெற்ற நாடக சபையான ‘லவ் குஷ் ராம் லீலா’ குழு சார்பில் ராம் லீலா நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில், ராவணன் மனைவி மண்டோதரி வேடத்தில் நடிகை பூனம் பாண்டே நடிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்கு அவரும் தயாரானார்.  திரைப்படங்களில் ஆபாசமாக நடித்து வரும் நடிகை மண்டோதரி வேடத்தில் நடிப்பதா என பல்வேறு இந்து அமைப்புகளும் போர்க்கொடி தூக்கியுள்ளன.

 

ராம் லீலா அமைப்பு ஆதரவு:

ஆனால் இதை நடத்த உள்ள ரால் லீலா குழு, “இது ஒன்றும் தவறு இல்லை. எங்கள் குழுவில் 500க்கும் மேற்பட்ட கலைஞர்கள் இருக்கிறார்கள். அதில், பூனம் பாண்டேவும் ஒருவர்”என்று கூறியுள்ளது. இது தொடர்பாக பேசிய ராம் லீலா குழுவின் தலைவர்,”செப்டம்பர் 29 மற்றும் 30 ஆம் தேதியில் நடைபெறும்  நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்வதாக இருக்கிறது. இந்த விசயத்தில் விவாதங்களுக்கு நாங்கள் தயராக இருக்கிறோம். ராம்லீலாவில் நன்மையைப் பிரதிபலிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் ஒரு பெண் நடிப்பதில் நாங்கள் எந்தத் தவறும் காணவில்லை. அனைவருக்கும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்" என்று கூறியுள்ளார்.