தமிழ்நாட்டு வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் SEZ
தமிழ்நாட்டில் செயல்படும் 54 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் நடப்பாண்டில் மட்டும் 7 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக தகவல். சிறப்பு பொருளாதார மண்டலங்கள் மூலம் ரூ.2.20 லட்சம் கோடி ஏற்றுமதியாகியுள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 3.57 லட்சம் பேரும், சென்னையில் 1.59 லட்சம் பேரும், கோவையில் 78,457 பேரும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக புள்ளி விவரத்தில் தெரிவிப்பு
தவெக நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு!
திருவாரூரில் விஜய்க்கு கிரேன் மூலம் மாலை அணிவித்த தவெக நிர்வாகிகள் மீது போலீசார் வழக்குப் பதிவு. பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் வகையிலும், அனுமதி இல்லாமலும் செயல்பட்டதாகக் கூறி கிரேன் உரிமையாளர் உட்பட 4 பேர் மீது வழக்குப் பதிந்துள்ளனர்.
சாமியார் மீது குற்றப்பிரிவு போலீசாரும் வழக்குப் பதிவு!
பாலியல் வழக்கில் ஆஜராகாத பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி எனப்படும் சாமியார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 2004ல் தொழிலதிபரின் மனைவி, மகளை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த விவகாரத்தில் இவர் உட்பட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்ற விசாரணை நடைபெறுகிறது. பலமுறை சம்மன் அளித்தும் வராததால் நடவடிக்கை.
இன்று முதல் அமலுக்கு வந்தது GST மறுசீரமைப்பு
மத்திய அரசின் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நாடு முழுவதும் இன்று முதல் அமலுக்கு வந்தது. 375 பொருட்களின் விலை கணிசமாக குறையும். 5%,12%,18% மற்றும் 28% என 4 அடுக்குகளாக இருந்த வரி விதிப்பு, இனி 5%,18% என தொடரும். வரி குறைப்பின் பலன்களை மக்களுக்கு வழங்க நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தல்.
தேர்தல் ஆணையர் உத்தரவு
வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு வரும் 30ம் தேதிக்குள் தயாராக இருக்குமாறு அனைத்து மாநில தேர்தல் ஆணையர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு. பீகாரில் நடத்தப்பட்டது போல வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொள்ள முடிவு.
ரயில்வே நிர்வாகத்திற்கு வந்த சோதனை
AC ரயில்களில் வழங்கப்படும் போர்வை, படுக்கை விரிப்புகளை மக்கள் திருடுவதால், ரயில்வேக்கு ஆண்டுக்கு ரூ.1 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல். டெல்லி, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் இந்த பொருட்களை திருடிச் செல்வது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியானதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு
கற்பை நிரூபிக்க பரிசோதனை
குஜராத்: பெண் ஒருவரின் கற்பை நிரூபிக்க கொதிக்கும் எண்ணெயில் கையை விடுமாறு கூறி கொடுமைப் படுத்திய நாத்தனார், கணவர் மற்றும் அவரின் 2 சகோதரர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு! கையை எண்ணெயில் விட அப்பெண் மறுத்த நிலையில், தானே அவரின் கையை பிடித்து எண்ணெய்க்குள் விட்டுள்ளார் நாத்தனார் ஜமுனா. காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதி
ட்ரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக் கொண்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க். சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட ட்ரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து உரையாடினர்.
திறமைமிகு ஊழியர்களை இழுக்க களம் இறங்கும் சீனா
அமெரிக்காவில் H-1B விசாவுக்கான ஆண்டுக் கட்டணம் பல மடங்கு அதிகரித்த நிலையில், K-விசா என்ற புதிய விசாவை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது. H-1B விசா கட்டண உயர்வால் பாதிக்கப்படுகின்ற, உலகம் முழுவதும் உள்ள அதிதிறமையான பணியாளர்களை தன்பக்கம் ஈர்க்கும் நோக்கில் இந்த புதிய விசா அறிமுகம் ஆகியுள்ளது. அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது.
பாகிஸ்தானை கலாய்த்த சூர்யகுமார் யாதவ்
“முதலில் இந்தியா - பாகிஸ்தான் போட்டியை Rivalry எனக் கூறாதீர்கள். இரு அணிகளும் 15-20 ஆட்டங்களில் விளையாடி, 7-7 அல்லது 8-7 என வெற்றி பெற்றிருந்தால் அப்படிச் சொல்லலாம். ஆனால் 10-1 அல்லது 10-0 ஆக இருந்தால் அது எப்படி Rivalry ஆகும்? அதனால் இனிமேல் இது Rivalry-யே அல்ல" - பாகிஸ்தானுக்கு எதிரான நேற்றைய போட்டியில் வெற்றி பெற்ற பின் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேட்டி.