சிக்னலில் காரை நிறுத்தாமல் சென்ற இளம்பெண் விதியை மீறி உள்ளார். போக்குவரத்து போலீசார் விசாரித்ததற்கு 'தான் எம்.எல்.ஏ வின் மகள் எனது காரையே நிறுத்துவீர்களா' என வாக்குவாதம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாஜக எம்.எல்.ஏவின் மகள்
பெங்களூருவில் கார் ஒன்று சிக்னலில் நிற்காமல் சென்றது. உடனே பின் தொடர்ந்து சென்ற போக்குவரத்து போலீசார் காரை மடக்கிப் பிடித்து நிறுத்தினர். உள்ளே இருந்த பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியின் மகள் கீழே இறங்கி 'எம்.எல்.ஏ மகளான எனது காரையே நிறுத்துவீங்களா' எனப் போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் இதனைப் படம்பிடித்து கொண்டிருந்த கேமராக்களை தள்ளிவிட்டார். தொடர்ந்து வாக்குவாததில் ஈடுபட்ட அவர், தான் பாஜக எம்.எல்.ஏ அரவிந்த் லிம்பாவலியின் மகள் என தொடர்ந்து சொல்லிக்கொண்டு, போக்குவரத்து போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
10 ஆயிரம் ரூபாய் அபராதம்
அந்த பெண் எவ்வளவு வாக்குவாதத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தும் போலீசார் அந்த காருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் அவருடன் கூட வந்த நண்பர் 10 ஆயிரம் ரூபாயை செலுத்தி காரை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். தனது பணியினை பாரபட்சம் பார்க்காமல் மிகச் சரியாக செய்த காவலரை பலரும் பாராட்டி வருகின்றனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Daughter of BJP MLA Aravind Limbavali got into heated arguments with traffic cops after she jumped a traffic signal in a BMW on Thursday.#BJP #Bengaluru https://t.co/VsQXZg6KkM
— TIMES NOW (@TimesNow) June 10, 2022
சாலை விதிகள் அனைவருக்குமானது
சாலை விதிகள் அனைவருக்குமானது என்பதை அவ்வப்போது சில நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன. இதுபோன்ற நிகழ்வுகள் எவ்வளவு மற்றவர்களுக்கோ அல்லது நமக்கோ எவ்வளவு நிகழ்ந்தாலும் நாமும் நமது சமூகமும் தன்னை திருத்திக்கொண்டதாக இல்லை. இனிவரும் காலங்களிலாவது சாலைவிதிகளை மிகச் சரியாக கடைபிடித்து விபத்தில்லா, அபராதமில்ல பாதுகாப்பான பயணத்தினை மேற்கொள்ள நம்மை முன் நகர்த்துவோம்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்