காலியாக உள்ள 57 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் (இன்று) வெள்ளிக்கிழமை நடைபெற்றது. உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, பீகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர், பஞ்சாப், தெலுங்கானா, ஜார்கண்ட் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் ஏற்கனவே 41 வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அரியானா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய 16 இடங்களுக்கு வெள்ளிக்கிழமை தேர்தல் நடைபெற்றது.


ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் போட்டியிட்ட நான்கு இடங்களில் 3 இடங்களை கைப்பற்றியது. கர்நாடகாவில் பாஜக மூன்று இடங்களையும், காங்கிரஸ் ஒரு இடத்தைப் பெற்றுள்ளது. விதிகளை மீறியதாகக் கூறி மகாராஷ்டிரா மற்றும் ஹரியானாவில் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 










மாநில வாரியாக வெற்றி பெற்றவர்களின் முழு பட்டியல் இதோ: 


ராஜஸ்தான் :


காங்கிரஸ் - பிரமோத் திவாரி, ரன்தீப் சுர்ஜேவாலா, முகுல் வாஸ்னிக்


பாஜக - கன்ஷ்யாம் திவாரி


மகாராஷ்டிரா வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு 


ஹரியானாவாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு 


கர்நாடகா :


பாஜக - நிர்மலா சீதாராமன், ஜக்கேஷ், லெஹர் சிங் சிரோயா


காங்கிரஸ் - ஜெய்ராம் ரமேஷ் 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண