மாநிலங்களவையில் காலியாகவுள்ள 16 இடங்களை நிரப்புவதற்கான தேர்தல் இன்று நடைபெற்றுவருகிறது. 41 வேட்பாளர்கள் போட்டியின்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஜூலை மாதம், குடியரசு தலைவர் நடைபெறவுள்ள நிலையில், இந்த மாநிலங்களவை தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.




எதிர்க்கட்சிகள் ஆட்சியில் உள்ள மகாராஷ்டிரா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் போட்டி கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குதிரை பேரத்தில் ஈடுபட்டு எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்க இரு தரப்பினரும் முயற்சி மேற்கொள்ள வாய்ப்புள்ளதால், தங்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்களை  அரசியல்வாதிகள் ரிசார்ட்டில் தங்க வைத்துள்ளனர். கர்நாடகா மற்றும் ஹரியானா ஆகிய மாநிலங்களிலும் எம்எல்ஏக்கள் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.




கர்நாடகாவில் பரபரப்பாக நடைபெற்ற தேர்தலில், மதசார்பற்ற ஜனதா தள கட்சி எம்எல்ஏ சீனிவாச கவுடா, காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளார். இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அவர், "காங்கிரஸ் கட்சியை பிடிக்கும். எனவே, வாக்களித்தேன்" என்றார். அதேபோல, மதசார்பற்ற ஜனதா தள கட்சியை சேர்ந்த மற்றொரு எம்எல்ஏவும் கட்சி மாறி வாக்களித்துள்ளார். குதிரை பேரம் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள அக்கட்சியின் தலைவர் குமாரசாமி, "32 எம்எல்ஏக்களில் 30 எங்களுக்கு வாக்களித்தனர்" எனக் கூறியுள்ளார்.


ராஜஸ்தானிலும் ஆளும் காங்கிரஸ் கட்சி பாஜகவை சேர்ந்த இரண்டு எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். மேலும், பாஜகவின் மற்றொரு எம்எல்ஏவின் வாக்குக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரியானாவில் காங்கிரஸ் பின்னடைவை சந்தித்ததாகவே கூறப்படுகிறது. அங்கு காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ஒருவரின் வாக்கு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.





ஹரியானாவில் காலியாக உள்ள இரண்டு இடங்களில் பாஜக சார்பாக முன்னாள் மத்திய அமைச்சர் கிருஷ்ண லால் பன்வார் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் சா்ர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் அஜய் மக்கான் போட்டியிட்டுள்ளார். சுயேச்சையாக ஊடக தொழிலதிபர் கார்த்திகேய சர்மா போட்டியில் உள்ளார். 


மகாராஷ்டிராவில் 20 ஆண்டுகளுக்கு பிறகு மாநிலங்களவை தேர்தலில் போட்டி ஏற்பட்டுள்ளதால் ஆளும் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. கைதாகியுள்ள அவர்களின் எம்எல்ஏக்களுக்கு வாக்களிக்க பிணை மறுக்கபட்டுள்ளது.


கடந்த 1990க்கு பிறகு, 100 மாநிலங்களவை உறுப்பினர்கள் பெற்ற முதல் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. குடியரசு தலைவர் தேர்தலில் வெற்றிபெறுவதற்கு இந்த மாநிலங்களவை தேர்தல் அவர்களுக்கு முக்கியமாக பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகள், இன்று மாலையே அறிவிக்கப்படவுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண