Rajasthan BJP Minister: மக்களவை தேர்தலின் போது விடுத்த சவாலில் தோற்றதால், கிரோடி லால் மீனா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
பாஜக அமைச்சர் ராஜினாமா..!
ராஜஸ்தான் அமைச்சரவையில் இருந்து பாஜக தலைவர் கிரோடி லால் மீனா ராஜினாமா செய்துள்ளதாக அவரது உதவியாளர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான அறிவிப்பில், "கிரோடி மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா கடிதத்தை 10 நாட்களுக்கு முன்பு முதல்வரிடம் கொடுத்தார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின் போது, தனது பொறுப்பில் உள்ள ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் பாஜக தோல்வியுற்றாலும், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கிரோடி லால் மீனா பேசியிருந்தார்.
சவாலில் தோற்றதால் ராஜினாமா..!
ஆனால், அவரது சொந்த தொகுதியான தௌசா உட்பட நான்கு தொகுதிகளில் பாஜக தோல்வியடைந்தது. இதனால் தேர்தல் முடிவுகள் வெளியானது முதலே அவர் தனது அமைச்சர் அலுவலகத்திற்கு வராமல் இருந்தார். இந்நிலையில் 72 வயதான கிரோடி லால் மீனா தான் வகித்து வந்த மாநில வேளாண்மை, ஊரக வளர்ச்சி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளதார். ஆனால், அவரது ராஜினாமா இன்னும் ராஜ்ஸ்தான் முதலமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.
சொந்த தொகுதியில் தோல்வி:
கிரோடி லால் மீனாவின் சொந்த தொகுதியான தௌசாவிலேயே பாஜக வேட்பாளர் தோல்வியை தழுவினார். இதனால் அவர் ராஜினாமா செய்வார் என ஊகங்கள் பரவின. இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் முராரி லால் மீயா 6,46,266 வாக்குகள் பெற்று பாஜகவின் கன்ஹையா லால் மீனாவை 2,37,340 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். பகுஜன் சமாஜ் கட்சியின் சோனு தங்கா மூன்றாவது இடத்தையும், இரண்டு சுயேட்சைகள் இரண்டாவது இடத்தையும் பிடித்தனர். ராஜஸ்தான் விவசாயம், கிராமப்புற மேம்பாடு, பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைச்சர், பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு ராஜஸ்தானில் தாம் கடுமையாக உழைத்த ஏழு இடங்களை தனக்கு ஒதுக்கியதாகக் கூறியிருந்தார். பாரத்பூர், கரௌலி-தோல்பூர் மற்றும் டோங்க்-சவாய் மாதோபூர் ஆகியவை மீனாவின் பொறுப்பில் உள்ள மற்ற மக்களவைத் தொகுதிகளில் பாஜக தோல்வியைச் சந்தித்தவை ஆகும்.
கிரோடி லால் மீனா தரப்பு சொல்வது என்ன?
"கிரோடி மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமாவை 10 நாட்களுக்கு முன் முதல்வரிடம் கொடுத்தார்," என்று அமைச்சரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். கிரோடி லால் மீனா ராம்சரித்ரமானஸின் புகழ்பெற்ற வரிகளான 'ரகுகுல் ரீதி சதா சலி ஆயி, பிரான் ஜெய் பர் வச்சன் நா ஜெய்' என X இல் பதிவிட்டுள்ளார். அதாவது எந்த விலை கொடுத்தாலும் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அவரது அசைக்க முடியாத நோக்கத்தை அடிக்கோடிட்டுக் காட்டினார். அவர் சொன்ன வார்த்தைகளை காப்பாற்ற ராஜினாமா செய்ததாக மீனா கூறினார்.
“அதிருப்திக்கு எந்த காரணமும் இல்லை, நான் ராஜினாமா செய்தேன், நான் ராஜினாமா செய்திருந்தால், நான் தார்மீகமாக செல்ல முடியும் என்பதால், நான் சமீபத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்திற்கு செல்லவில்லை, நான் முதல்வரை சந்தித்தேன். ராஜினாமாவை ஏற்க மாட்டேன் என்று மரியாதையுடன் கூறினார். ," என்று நேர்காணலில் தெரிவித்துள்ளார்..