ராஜஸ்தான் மாநிலத்தில் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாக மனைவி தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் அந்த பெண்ணின் கணவருக்கு உயர்நீதிமன்றம் 15 நாள் பரோல் வழங்கியுள்ளது. நீதிபதிகள் சந்தீப் மேத்தா மற்றும் ஃபர்ஜந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.


ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தை சேர்ந்தவர் நந்தலால் (வயது 34). திருமணமான நிலையில் 2018 ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து அஜ்மீரில் உள்ள மத்திய சிறையில் நந்தலால் அடைக்கப்பட்டுள்ளார். இதனால் அவரால் இல்லற வாழ்க்கையில் ஈடுபட முடியவில்லை. இவரது மனைவி,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் இருந்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பதாகவும் அதனால் அவருக்கும் பரோல் வழங்க வேண்டுவதாகவும் அந்த மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்திருந்தார். கடந்த டிசம்பர் மாதம் மனு அளிக்கப்பட்ட நிலையில் அதன் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து மனைவி சார்பில் ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேக்தா, பர்சாந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இந்த மனுவை நீதிபதிகள் சந்தீப் மேக்தா, பர்சாந்த் அலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது நந்தலாலின் மனைவியின் கோரிக்கையை ஏற்று நீதிபதிகள் அவருக்கு 15 நாள் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்.



11 மாதங்களுக்கு முன்பு நந்த்லால்க்கு 20 நாள் பரோல் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக அவரது மனைவி, வழக்கறிஞர் ஒருவருடன் சிறை அதிகாரிகளை அணுகி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். தனது உரிமையை நிறைவேற்றும் வகையில் தனது கணவரை சில நாட்கள் பரோலில் விடுவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் சிறை அதிகாரிகளிடம் இருந்து பதில் வராததால், கலெக்டரிடம் சென்று மனு அளித்துள்ளார். கலெக்டரும், பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், நிலுவையில் வைத்திருந்த நிலையில், இறுதியாக உயர்நீதிமன்றத்தை அந்த பெண் நாடியுள்ளார். நீதிமன்றத்தில் தனது வாதத்தை முன் வைத்த பெண், தன் கணவர் தற்செயலாக ஒரு குற்றத்தை செய்ததாகவும், அவர் ஒரு தொழில்முறை குற்றவாளி அல்ல என்றும் அவர் கூறினார். மேலும், தனது கணவர் சிறை விதிகள் அனைத்தையும் கண்டிப்பாக பின்பற்றி வருவதாகவும் அவர் கூறினார்.



இந்த உத்தரவின்போது நீதிமன்றம் இலக்கியம், மதம்சார்ந்த விஷயங்களையும், பிற நீதிமன்ற தீர்ப்புகளையும் மேற்கொள் காட்டியிருந்தது. "சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி குழந்தை பெற்று கொள்ள உரிமை உள்ளது. அவர் எந்த குற்றங்களையும் செய்யவில்லை. தண்டனையை காரணம் காட்டி அவரது மனைவியை விருப்பத்தை தடுப்பது அவரது உரிமையை பறிப்பதோடு, அவரை மோசமாக பாதிக்கும். இந்து கிறிஸ்தவம், இஸ்லாம் என அனைத்து மதங்களுக்கு தாம்பத்தியம், வாரிசுகள், இல்லறம் குறித்து கூறியுள்ளன. இலக்கியங்களிலும் இது தொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது" என்று கோர்ட் குறிப்பிட்டுள்ளது. மேலும், "கணவர் தண்டனை பெற்றதால் இந்த வழக்கில் அப்பாவி மனைவி பாதிக்கப்பட்டுள்ளார். ஒரு பெண்ணாக இருந்து அவர் தாயாக மாற குழந்தையை பெற்றேடுக்க வேண்டியது அவசியமாகும். அவர் தாயாகும்போது அவரது திப்பு இன்னும் பெரியதாக மாறுகிறது. குடும்பத்திலும் சமூகத்திலும் மிகவும் மரியாதைக்குரியவராக மாறுகிறார். கைதியின் மனைவி நிரபராதி என்பதால் அவர் பாதிக்கப்படக்கூடாது என நீதிமன்றம் கருதுகிறது. மேலும் இந்த விஷயத்தை மனிதாபிமான ரீதியாக நீதிமன்றம் அணுகுகிறது. இதனால் ஆயுள் தண்டனை பெற்ற கைதிக்கு 15 நாள் பரோல் வழங்கப்படுகிறது" என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.