ராஜஸ்தான் மாநிலம் கரவுலியில், மத ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்தால், நகர் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ராஜஸ்தான் மாநிலத்தின் கரவுலி கலவரத்தின் போது எரிந்துகொண்டிருந்த கட்டிடத்தில் புகுந்து கைக்குழந்தையை உயிருடன் மீட்டு வந்த காவலரின் புகைப்படம் இணையத்தில் வைரலானது. அந்தக்காவலருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். காவல் அதிகாரிகள் ஷாம்லி, ஐபிஎஸ் அதிகாரி சுக்ரிதி மாதவ் மிஸ்ரா ஆகியோர் போலீஸ் கான்ஸ்டபிள் நெட்ரேஷ் சர்மாவை பாராட்டு ட்வீட் செய்துள்ளனர். 


இது குறித்து பதிவிட்டுள்ள  சுக்ரிதி மாதவ், போலீஸ் கான்ஸ்டபிள் நட்ரேஷ் சர்மாவை நினைத்து பெருமைப்படுகிறேன். அவர் விலை மதிப்பில்லாத ஒரு உயிரை காப்பாற்றியுள்ளார். இந்தப்படம் ஆயிரம் வார்த்தைகளுக்கு ஒப்பானது என குறிப்பிட்டுள்ளார். தீயில் இருந்து குழந்தையை போலீசார் காப்பாற்றி வரும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்






ராஜஸ்தான் கலவரம்:


ராஜஸ்தான் மாநிலத்தில் புத்தாண்டாக கொண்டாடப்படும் விழா நவ சம்வத்ஸர். அந்த விழாவின்போது மோட்டார் சைக்கிளில் பேரணி நடைபெற்றது. அப்போது, திடீரென விழாவுக்குள் புகுந்த மர்ம கும்பல் கற்களை கூட்டத்துக்குள் வீசினர். இதனால் புத்தாண்டு விழா கலவரமாக மாறியது. பல இடங்களில் தீ வைக்கப்பட்டது. போர்க்களமாக காட்சி அளித்த அந்த தாக்குதலில் காவல்துறை அதிகாரிகள் உட்பட ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.