Shocking Video: குடி போதையில் நாய்க்குட்டிக்கு மது ஊற்றிய கொடூரம்.. வீடியோ பதிவு வைரலானதால் பதிவான வழக்கு..
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரை சேர்ந்த ஷேரு போர்டா என்ற நபரும், அவருடைய நண்பர்கள் சிலரும் ஒரு காட்டு பகுதிகளில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர்.

சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்று பரவி வைரலாகி வருகிறது. இதில், ராஜஸ்தானை சேர்ந்த இளைஞர்கள் சிலர் நாய்க்குட்டி ஒன்றுக்கு மது ஊற்றி கொடுத்துள்ளனர். அதனை வீடியோவாகவும் எடுத்து லைக்ஸுகளுக்காக சமூக வலைதளங்களிலும் பதிவிட்டுள்ளனர். அந்த நாய்க்குட்டி ஏதும் அறியாமல் மிகுந்த மகிழ்ச்சியுடன் மது அருந்துகிறது.
என்ன நடந்தது..?
ராஜஸ்தானின் சவாய் மாதோபூரை சேர்ந்த ஷேரு போர்டா என்ற நபரும், அவருடைய நண்பர்கள் சிலரும் ஒரு காட்டு பகுதிகளில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வந்துள்ளனர். அப்போது, அங்கிருந்த நாய்க்குட்டி தாகத்திற்காவும், பசிக்காகவும் அவர்களை சுற்றி சுற்றி வந்துள்ளது. இதை பார்த்த அவர்கள் ஒரு பிளாஸ்டிக் கிளாஸில் விஸ்கி மற்றும் தண்ணீர் கலந்து நாய்க்குட்டிக்கு கொடுத்துள்ளனர். மிகவும் தாகத்தில் இருந்து அந்த நாய்க்குட்டியும் இது அதையும் அறியாது அந்த மது கலந்த தண்ணீர் குடித்துள்ளது.
இதை முழுவதும் வீடியோ எடுத்த அந்த நண்பர்கள் குழு சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளுவதற்காக பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த பதிவுகளில் கீழ் கண்டனங்களை பதிவிட்டனர்.
இந்தநிலையில், ராஜஸ்தான் காவல்துறையினர் ஹெல்ப் டெஸ்க் ஆன் எக்ஸ் மூலம் உள்ளூர் காவல்துறையினர் டேக் செய்து, விஷயத்தை கண்காணிக்கும்படி கூறியது. இதற்கு பதிலளித்த உள்ளூர் காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக உறுதியளித்தனர்.
விலங்குகள் மது அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள்:
நாய், பூனை போன்ற விலங்களுக்கு மது கொடுப்பது மிகவும் ஆபத்தான செயல்களில் ஒன்று. இதற்கு காரணம், விலங்குகளில் உள்ள கல்லீரல் ஆல்கஹாலை பிரிக்கும் தன்மை கொண்டது கிடையாது. ஆல்கஹாலால் விலங்குகளுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டு மரணத்திற்கு வழிவகுக்கும். மேலும், விலங்களுக்கு உடல் வெப்பநிலையை குறைத்து சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும்.
இது முதல்முறையல்ல - கடுமையான நடவடிக்கை தேவை:
இது மாதிரியான சம்பவங்கள் இந்தியாவில் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. ஏற்கனவே உத்தரபிரதேசத்தின் ரேபரேலி மாவட்டத்தில் இதேபோன்ற சம்பவத்திற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் இளைஞர்கள் குழு ஒன்று நாய்க்குட்டியை மது அருந்த செய்து அதனை வீடியோவாக பதிவிட்டனர். வீடியோவை ஆதரவாக கொண்டு, சம்பவ இடத்தில் இருந்த 4 பேர் மீது விலங்கு பிரியர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்தியாவில் விலங்குகளை பாதுகாக்கவும், அத்தகையை செயல்களுக்கு காரணமானவர்களை தண்டிக்கவும் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.