தமிழ்நாடு:



  • சென்னையில் இன்று தொடங்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சுமார் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் சார்பில் “கலைஞர் 100” (Kalaingar 100) நிகழ்ச்சி மிக பிரமாண்டமான முறையில் நேற்று நடைபெற்றது.

  • தூத்துக்குடியில் 16 ஆயிரம் கோடி மதிப்பில் வின்பாஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளதால் அந்த தொழிற்சாலைக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்.

  • தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் - சென்னை வானிலை மையம் தகவல்

  • பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுவதை முன்னிட்டு வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து நியாய விலைக்கடைகளும் இயங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

  • தமிழ்நாட்டில் இன்று முதல் நியாய விலை கடைகளில் ரூ. 1000 ரொக்கம் பெறுவதற்கான டோக்கன் வழங்கப்படும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

  • திமுக இளைஞரணி மாநாடு ஜனவரி 21ம் தேதி சேலத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா: 



  • 15 கோடி ரூபாய் ஏமாற்றியதாக முன்னாள் வணிக பங்குதாரர் மீது தோனி புகார்

  • சூரியனை ஆய்வு செய்யும் நோக்கில் விண்ணில் செலுத்தப்பட்ட ஆதித்யா எல்1 விண்கலம், வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டியுள்ளது.

  • ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை அமல்படுத்த ஏதுவாக சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து பொது மக்களிடம் முன்னாள் குடியரசு தலைவர் தலைமையிலான குழு கருத்துகளை கேட்டுள்ளது.

  • அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவிற்காக, உலக புகழ்பெற்ற திருப்பதி லட்டுகள் பரிசாக அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த 10 நாள்களிலேயே அக்கட்சியில் இருந்து ராயுடு விலகியிருப்பது ஆந்திர அரசியலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ராமர் கோயிலில் வைக்கப்படுவதற்காக 450 கிலோ எடையில் டிரம் (Drum) தயாரிக்கப்பட்டுள்ளது.

  • சபரிமலைக்கு வரும் பக்தர்களிடம் உணவகங்களில் கூடுதல் விலை வசூலிக்கக்கூடாது: கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு


உலகம்: 



  • ஹமாஸ் அமைப்பின் துணை தலைவர் படுகொலைக்கு விரைவில் பதிலடி - ஹிஸ்புல்லா அமைப்பினர் எச்சரிக்கை.

  • எதிர்க்கட்சிகளின் வன்முறைக்கு இடையே வங்கதேசத்தில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

  • மாலத்தீவு அதிபர், வெளியுறவு அமைச்சக இணையதளங்கள் முடங்கிய நிலையில், மீண்டும் செயல்பட தொடங்கியது.

  • உக்ரைனில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 5 குழந்தைகள் உட்பட 11 பேர் உயிரிழப்பு.

  • சவுதி அரேபியாவில் தற்போது கட்டப்பட்டு வரும் ஜெட்டா டவர் கட்டுமான பணி முடிந்தவுடன், அது புர்ஜ் கலிபா கட்டிடத்தை விட உயரமானதாக இருக்கும்.


விளையாட்டு: 



  • 2வது டி20 போட்டி: இந்திய மகளிர் - ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் இன்று மோதல்.

  • ப்ரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை நேற்று வீழ்த்தியது குஜராத் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி.

  • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: ஆப்கானிஸ்தான் அணி அறிவிப்பு.

  • ப்ரோ கபடி லீக்: தமிழ் தலைவாஸ் அணி இன்று புனேரி பல்டான் அணிகளுக்கு எதிராக விளையாடவுள்ளது. 

  • பாகிஸ்தான் அணிக்கு எதிரான வெற்றி : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலிய அணி