மத்திய ரயில்வேத் துறை இணையமைச்சர் சோமண்ணா, பெங்களூருவில் முக்கிய ரயில் திட்டங்கள் குறித்து நாளை விரிவான ஆய்வு  ஆய்வு நடத்தவுள்ளார்.


பெங்களூருவில் புதிய ரயில்வே திட்டங்கள்:


பெங்களூரு யெலஹங்காவில் உள்ள ரயில் சக்கரத் தொழிற்சாலையில் (RWF) ரயில்வே இணையமைச்சர் ஆய்வு செய்யவுள்ளார். இந்த ஆய்வின்போது, ​​தொழிற்சாலையின் செயல்பாடுகள், அத்தியாவசிய ரயில் உதிரிபாகங்கள் உற்பத்தியில் முன்னேற்றம் ஆகியவற்றை சோமன்னா ஆய்வு செய்வார்.


பெங்களூரு புறநகர் ரயில் திட்டம் குறித்த ஒரு ஆய்வுக் கூட்டத்திலும் இணையமைச்சர் பங்கேற்கவுள்ளார்.  திட்டங்களின் காலக்கெடு, மேம்பாட்டுப் பணிகளில் முன்னேற்றம், புறநகர் ரயில் கட்டமைப்பின் திறனை மேம்படுத்துவதற்கான உத்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் வகையில் இந்த ஆய்வை அமைச்சர் மேற்கொள்ளவுள்ளார்.


இந்திய ரயில்வே தனது தோற்றத்தையும் அணுகுமுறையையும் முற்றிலும் மேம்படுத்தி வருகிறது. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் போன்ற நவீன மற்றும் விரைவு ரயில் சேவையை தொடங்கியுள்ளது மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான ரயில் நிலையங்களை புதுப்பிக்கும் திட்டமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


உலகத்தரம் வாய்ந்த வசதிகள்:


இது தவிர பொதுமக்களின் வசதிக்காக அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை ஆய்வு செய்தார். இது தவிர வந்தே மெட்ரோவும் தயாராக உள்ளது. மணிக்கு 250 கிமீ வேகத்தில் பயணிக்க ரயில்வே நிர்வாகம் தயாராகி வருகிறது. இதற்கான டெண்டர்களும் விடப்பட்டுள்ளன. 


இதனிடையே, வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் அதிகபட்ச வேகம் மணிக்கு 160 கி.மீ ஆக இருக்கும் என கூறப்படுகிறது. சதாப்தி எக்ஸ்பிரஸ் போன்ற பயண வகுப்புகள் இதில் வைக்கப்பட்டுள்ளன. வந்தே பாரதத்தில் பல நவீன வசதிகள் உள்ளன.


இந்த ரயில் பயணிகளுக்கு முற்றிலும் புதிய பயண அனுபவத்தை வழங்குகிறது. இந்த மாத தொடக்கத்தில், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இந்தியாவின் முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலை BEML இன் பெங்களூரு ரயில் வளாகத்தில் ஆய்வு செய்தார். இந்த ரயிலில் உலகத்தரம் வாய்ந்த பல வசதிகள் உள்ளன. இதில் USB சார்ஜிங், ரீடிங் லைட், டிஸ்ப்ளே பேனல், பாதுகாப்பு கேமராக்கள், மாடுலர் பேண்ட்ரி மற்றும் நவீன டாய்லெட் ஆகியவை அடங்கும்.