இந்தியாவில் தடுப்பூசி போடும்பணியானது மிகவும் மெதுவாக நடைபெற்றுவருவதாக கூறி பிரதமர் மோதிக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதமெழுதியுள்ளார். தடுப்பூசியை பயன்படுத்த சாதகமான நிலை இருந்தும் நத்தை வேகத்தில் அந்த பணி நகர்வதாக அவர் மோதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய திருநாடு தனது வரலாற்றில் பல சிறந்த தடுப்பூசி திட்டங்களை வடிவமைத்து செயல்படுத்தியுள்ளது. ஆனால் கடந்த 3 மாதங்களில் மொத்த இந்திய ஜனத்தொகையில் 1 சதவிகித மக்களுக்கு மட்டுமே தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. கணிசமான மக்கள் தொகையை கொண்ட பல நாடுகள் இதைவிட அதிகமான அளவில் தங்களுடைய மக்களுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது என்றும் அவர் அந்த பதிவில் கூறினார்.

Shri Rahul Gandhi writes to PM Modi expressing concerns about & giving valuable suggestions to improve Covid19 vaccination program. #CoronavirusIndia #MaharashtraNeedsVaccine pic.twitter.com/C876rIJCaa
— Nagma (@nagma_morarji) April 9, 2021

தடுப்பூசி வழங்கும் பணியானது இந்த வேகத்தில் சென்றால் 75 சதவிகித மக்களுக்கு தடுப்பூசி கொடுக்கவே பல ஆண்டுகள் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் தடுப்பூசி குறித்து மேலும் பல கேள்விகளை அவர் முன்வைத்துள்ளார்.