நொய்டா மெட்ரோ நிலையத்தில் 52 செக்டாரில் நேற்று, கையில் போனை வைத்துக்கொண்டு குறுச்செய்தி அனுப்பிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் ஒருவரிடம் இருந்த அந்த போனை ஒரு திருடன் அபகரித்துவிட்டு ஓட தொடங்கியுள்ளான். அந்த பத்திரிகையாளரும் அவரை துரத்த, ஒருகட்டத்தில் தான் எதிர்பார்த்த ஒன் பிளஸ் 9 ப்ரோ மாடல் போன் அதுவல்ல என்பதை அந்த திருடன் உணர்ந்துள்ளான். 

Continues below advertisement

உடனே ஓட்டத்தை நிறுத்திய அந்த திருடன், நின்று அந்த செல்போனை மீண்டும் அதன் உரிமையாளரை நோக்கி வீசிவிட்டு அங்கிருந்த சென்றுள்ளார். தான் எதிர்பார்த்த பொருள் கிடைக்காத நிலையில் அப்பொருளை திருப்பிக்கொடுத்துள்ளார் அந்த வித்தியாசமான திருடர். 

Continues below advertisement