பாஜகவின் சித்து வேலை! தலைமைக்கு போன சீக்ரெட் தகவல்! சினிமா பாணியில் அதிரடி காட்டிய ராகுல்காந்தி!
பாஜக ஆளும் குஜராத்தில், காங்கிரஸ் பல தசாப்தங்களாக ஆட்சியில் இல்லாத நிலையில், கட்சியை சுத்தம் செய்ய தேவைப்பட்டால், 40 தலைவர்களை நீக்க காங்கிரஸ் தயாராக உள்ளது என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.

குஜராத் மாநில காங்கிரஸ் கட்சியில் உள்ள சில தலைவர்கள் பாஜகவுக்காக ரகசியமாக செயல்பட்டு வருவதாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று குற்றம் சாட்டியுள்ளார்.
அகமதாபாத்தில் நடந்த ஒரு கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் ராகுல்காந்தி பேசினார். அப்போது அவர் பேசுகையில், “பாஜக ஆளும் மாநிலத்தில், காங்கிரஸ் பல தசாப்தங்களாக ஆட்சியில் இல்லை. கட்சியை சுத்தம் செய்வதற்காக, தேவைப்பட்டால், 40 தலைவர்களை நீக்கவும் காங்கிரஸ் தயாராக உள்ளது.
Just In




குஜராத்த்தில் இரண்டு வகையான தலைவர்களை பிரித்தால் தான் நாம் சவால்களை எதிர்கொள்ள முடியும். மக்களுடன் உண்மையிலேயே இணைந்திருப்பவர்கள் மற்றும் மக்களிடமிருந்து விலகி இருப்பவர்கள் என இரண்டு வகையான தலைவர்களை நாம் பிரிக்க வேண்டும்.
குஜராத் மக்களுடன் நாம் இணைய வேண்டும் என்றால், நாம் இரண்டு விஷயங்களைச் செய்ய வேண்டும். முதல் பணி இந்த இரண்டு குழுக்களையும் பிரிப்பதாகும். 10, 15, 20, 30, 40 பேரை நீக்க வேண்டியிருந்தாலும், ஒரு முன்மாதிரியாக இருக்க அதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.
காங்கிரசில் பாஜகவுக்காக ரகசியமாக வேலை செய்பவர்கள் வெளியே வர வேண்டும், பாஜகவுக்காக வெளிப்படையாக வேலை செய்ய வேண்டும். அவர்களைப் பார்ப்போம். பாஜகவிடம் உங்களுக்கு இடம் இருக்காது. அவர்கள் உங்களை வெளியே தூக்கி எறிவார்கள்.
தேர்தல்களில் கவனம் செலுத்துவது மட்டும் மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெற போதுமானதாக இருக்காது.
நாம் நமது பொறுப்புகளை நிறைவேற்றும் வரை, குஜராத் மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்க மாட்டார்கள். முதலில் நாம் அவர்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்” எனத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேலின் மகள் மும்தாஜ் படேல் பேசுகையில் ராகுல் காந்தியின் பேச்சு வெளிப்படையாகப் பேசுவதற்கான தைரியத்தை அளிக்கிறது எனத் தெரிவித்தார்.
மேலும், “எனக்கு கட்சியில் எந்தப் பதவியும் கிடைக்கவில்லை. எனக்கு எந்தப் பங்கும் இல்லை, அதனால்தான் நான் டெல்லியில் இருக்கிறேன். என்னைப் போன்ற தொண்டர்களை அவர்களின் தனிப்பட்ட நலன்களுக்காக வேலை வாங்கிய பலர் கட்சியில் உள்ளனர். இதன் காரணமாக கட்சி பலவீனமடைந்தது.
ராகுல்ஜி கள யதார்த்தத்தைப் புரிந்துகொண்டிருப்பார் என்று நம்புகிறேன். அதனால்தான் நாங்கள் கட்சிக்காக உழைக்க விரும்புகிறோம். ஆனால் வாய்ப்பு கிடைக்காது என்று தைரியமாகச் சொல்கிறேன்.” எனத் தெரிவித்தார்.