பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாகியுள்ளார்:ஒன்று பணக்காரர்களுக்கானது; மற்றொன்று ஏழைகளுக்கானது- ராகுல் காந்தி
பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்கியுள்ளார் என்றும் ஒன்று பணக்காரர்களுக்கானது; மற்றொன்று ஏழைகளுக்கானது என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.குஜராத்தில் மாநில தேர்தல் இந்த வருடம் நடைபெற உள்ளது. அதையொட்டி குஜராத்தில் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் ராகுல் காந்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தேர்தலுக்கான பிரச்சாரத்தை தஹோத் மாவட்டத்தில் ’சத்தியாகிரக பழங்குடியின பேரணியை’ தொடங்கி வைத்தார்.
மோடியின் 8 ஆண்டு ஆட்சி; இதற்குத்தான் பயன்படும்: ராகுல் காந்தி விமர்சனம்
இரண்டு இந்தியாவை பிரதமர் உருவாகியுள்ளார்:
பேரணியை தொடங்கி வைத்த ராகுல் காந்தி பழங்குடி மக்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி இந்தியாவை இரண்டு விதமாக உருவாக்கியுள்ளார். நாட்டில் உள்ள வளங்களை எடுத்து பணக்காரர்களுக்கு கொடுத்து, பணக்காரர்களுக்கான ஒரு இந்தியாவை பிரதமர் உருவாக்கியுள்ளார். ஏழை மக்கள் நாட்டின் முன்னேற்றத்திற்காக பாலங்கள் கட்டுதல், சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக கடுமையாக உழைக்கின்றனர். ஆனால் அவர்களுக்கு அதற்கு பலனாக திரும்ப எதுவும் கிடைப்பதில்லை. இப்படியாக ஏழைகளுக்கான மற்றொரு இந்தியாவை பிரதமர் உருவாக்கியுள்ளார்.
Also Read | Rahul Gandhi: உண்மையை மத்திய அரசு சொல்லவில்லை.. கொரோனா உயிரிழப்பு குறித்து பேசிய ராகுல்!
காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்:
அப்போது பழங்குடியினர் பேரணியில் தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, "பாஜக பழங்குடியினர் உரிமைகளை பறித்துள்ளது. உங்களுக்கான உரிமைகளை நீங்கள் கேட்டு பெற வேண்டும். அப்போதுதான் உங்களுக்கான உரிமை கிடைக்கும் என தெரிவித்தார். வரும் குஜராத் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் நிச்சயம் வெற்றி பெறும் என தெரிவித்தார். மேலும் கொரோனா காலத்தில் மக்களை காப்பாற்ற மோடி அரசு தவறிவிட்டது. மாறாக காப்பாற்றுவதற்கு பதில் வீட்டின் வெளியே மணி அடிக்க சொல்லியது. அதனால் கங்கையில் பல லட்ச கணக்கான மக்களின் உயிர்கள் மிதப்பதை கண்டோம் என பிரதமர் மோடியை ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
Also Read | Rahul Gandhi: ’வெறுப்பு அரசியலால் இந்தியா வளர்ச்சி அடையாது’- பிரதமர் மோடியை சாடிய ராகுல் காந்தி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்