மின் பற்றாக்குறை, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்னைகள் மற்றும் பணவீக்கம் குறித்து பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.


 பிரதமர் நரேந்திர மோடி  இந்த ஆண்டில் முதல் முறையாக ஐரோப்பிய நாடுகளில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி  குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்து விமர்சனம் செய்துள்ளார்.


அதில் மின் பற்றாக்குறை, வேலையின்மை, விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் பணவீக்கம் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும்  பிரதமர் நரேந்திர மோடியின் எட்டு ஆண்டுகால தவறான ஆட்சி, ஒரு காலத்தில் உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்த பொருளாதாரத்தை, எவ்வாறு அழிப்பது என்பது குறித்த ஒரு ஆய்வு என்று தெரிவித்துள்ளார்.


 






நாட்டில் நடந்து வரும் மின் நெருக்கடி குறித்து மோடியை, சனிக்கிழமையன்று, ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். இந்த நெருக்கடியில், தற்போதைய தோல்விக்கு யாரைக் குற்றம் சாட்டுவீர்கள் என்றும் ராகுல் காந்தி ட்விட்டரில் பிரதமரைக் கேள்வி கேட்டார். இது நிலக்கரி விநியோகத்தில் உள்ள பற்றாக்குறை மற்றும் மின் தேவை அதிகரித்து வரும் நிலையில் பராமரிப்புக்காக ஆலைகள் மூடப்பட்டதன் விளைவாகும் என்றும் ராகுல் காந்தி தெரிவித்திருந்தார்.


இந்த ட்வீட்டுடன், பிரதமரின் கடந்த கால உரைகளைக் காட்டும் ஒரு வீடியோவையும் ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார், அதில் அவர் 24 மணி நேரமும் மின்சாரம் கிடைக்கும் என்று பிரதமர் மோடி  உறுதியளித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் உரையாற்றிய வீடியோ குறித்து பல்வேறு செய்தி தொலைக்காட்சி நிறுவனங்கள் ஒலிபரப்பி வருகின்றனர்


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண