உத்தரகாண்ட், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த வருடம் நடக்கவிருக்கிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது வியூகங்களை வகுத்த ஆரம்பித்து பிரசாரத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளன.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக இன்று (அக்டோபர் 30) கோவா செல்வார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அவர் இன்று கோவா சென்றடைந்தார். கோவாவுக்கு சென்ற ராகுல் காந்தி மோட்டார் சைக்கிள் டாக்ஸியில் பயணம் செய்தார். அவர் இந்தப் பயணத்தை பாம்போலிமில் இருந்து பனாஜியில் அமைந்திருக்கும் ஆசாத் மைதானம்வரை மேற்கொண்டார். மோட்டார் சைக்கிளில் ராகுல் காந்தி பயணம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
இதனையடுத்து பேசிய ராகுல் காந்தி, “கோவாவை மாசுபட்ட இடமாக மாற்ற நாங்கள் அனுமதிக்க மாட்டோம், கோவாவில் உள்ள மிக முக்கியமான விஷயம் சுற்றுச்சூழல், அது பாதுகாக்கப்பட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெறும் வாக்குறுதி அல்ல அது உத்தரவாதம்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்த தேர்தலின்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம் என உறுதியளித்து அதை நிறைவேற்றினோம். பஞ்சாப், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதனை நீங்கள் உறுதி செய்துகொள்ளலாம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்