Puneeth Rajkumar Demise: என் நண்பன்... புனீத் உடலை பார்த்து கதறி அழுத சரத்குமார்!
பெங்களூரு: கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமார் உடலை பார்த்து நடிகர் சரத்குமார் கதறி அழுதார்.

கன்னட பவர் ஸ்டார் புனீத் ராஜ்குமாருக்கு உடற்பயிற்சி செய்யும்போது ஏற்பட்ட நெஞ்சு வலியால் பெங்களூரு விக்ரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது மறைவு ஒட்டுமொத்த இந்திய திரையுலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவையடுத்து புனீத்தின் உடல் கண்டீரவா மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த திரைத்துறையினர், அவரது ரசிகர்கள் என லட்சக்கணக்கானோர் மைதானத்தில் குவிந்துள்ளனர். 5 கி.மீ வரை அவரது ரசிகர்கள் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக காத்திருக்கின்றனர்.
Just In




இந்நிலையில் புனீத் ராஜ்குமாரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக நடிகர் சரத்குமார் நேரில் சென்றார். அப்போது புனீத்தின் உடலைப் பார்த்து அவர் கதறி அழுதது அங்கிருந்தவர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியது.

முன்னதாக சரத்குமார் புனீத் ராஜ்குமார் மறைவு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது இனிய நண்பர் புனீத் ராஜ்குமார் மறைந்துவிட்டார் என்ற நம்ப முடியாத செய்தியைக் கேள்விப்பட்டு நாங்கள் அதிர்ச்சியடைந்தோம். நான் சந்தித்த மிகச்சிறந்த மனிதர்களில் ஒருவர். நமது நாட்டின் ஒட்டுமொத்தத் திரைத்துறையைக் குறிப்பாக கர்நாடக திரைத் துறையினரை இந்த சோகத்திலிருந்து தேற்ற, ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகளே இல்லை.
விதியின் மர்மமான வடிவம், திரைத்துறையை மட்டுமல்ல, புனீத்தின் ஒட்டுமொத்த நண்பர்கள் உலகத்தையும் புரிந்துகொள்ள முடியாத சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது குடும்பத்துக்கும், நண்பர்களுக்கும், சக நடிகர்களுக்கும், ரசிகர்களுக்கும், கர்நாடக மக்களுக்கும் எங்களின் மனமார்ந்த அனுதாபங்கள். உன் இழப்பை நாங்கள் உணர்வோம். நீ என்றும் எங்கள் நினைவுகளில் வாழ்வாய் புனீத்” என பதிவிட்டிருந்தார்.
புனீத் ராஜ்குமாரின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் செய்யப்படுமென கர்நாடக அரசு தெரிவித்திருக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Puneeth Rajkumar Death Cause: புனீத் மரணம்: உடற்பயிற்சி செய்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருமா? மருத்துவர் விளக்கம்!