ஆபரேஷன் சிந்தூர் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்த ராகுல் காந்தி, ஜெய்சங்கர் மௌனம் காத்த நிலையில், தற்போது மீண்டும் கேள்வி எழுப்பியுள்ளார். அது குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

Continues below advertisement

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேட்டியளித்த ஜெய்சங்கர்

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதையடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஆபரேஷன் சிந்தூர் என பெயரிடப்பட்ட துல்லிய தாக்குதலை இந்தியா நடத்தியது. அதன்படி, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இருந்த தீவிரவாத நிலை களை ஒதே இரவில் துல்லியமாக தாக்கி அழித்தது இந்தியா. இதைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தத் தொடங்கியது. அதற்கு இந்தியாவும் பதிலடி கொடுத்ததால், தொடர்ந்து சண்டை நீண்டு வந்தது.

இந்நிலையில், அமெரிக்கா தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இந்தியா தற்காலிகமாக தாக்குதலை நிறுத்தி வைத்துள்ளது. அதே போல் பாகிஸ்தானும் தாக்குதலை நிறுத்தியுள்ளது. இனி எந்த ஒரு தீவிரவாத தாக்குதலும் போராகவே எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இந்தியா உடனடியாக தாக்குதலை தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

இந்த சூழலில், பேட்டி ஒன்றில், ஆபரேஷன் சிந்தூர் குறித்து பாகிஸ்தானுக்கு முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், இந்தியா தீவிரவாத நிலைகள் மீது தாக்குதல் நடத்த உள்ளதாகவும், ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தாது என்பதால், பாகிஸ்தான் ராணுவம் இதிலிருந்து ஒதுங்கி இருக்கலாம் என்றும் யோசனை வழங்கப்பட்டதாகவும், ஆனால் பாகிஸ்தான் அந்த நல்ல யோசனையை ஏற்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார்.

ஜெய்சங்கருக்கு கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி

இந்த பேட்டியை மேற்கோள் காட்டி, தனது சமூக வலைதளத்தில் கடந்த 17-ம் தேதி பதிவிட்ட ராகுதல் காந்தி, தாக்குதல் குறித்து தொடக்கத்திலேயே பாகிஸ்தானுக்கு தெரிவிக்கப்பட்டது ஒரு குற்றம் என கூறியிருந்தார். வெளியுறவுத்துறை அமைச்சர் இந்திய அரசு அதை செய்ததாக வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், அதற்கு யார் அனுமதி கொடுத்தது என கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், முன்கூட்டியே தகவல் அளிக்கப்பட்டதன் விளைவாக, நமது விமானப்படை எத்தனை விமானங்களை இழந்தது என்றும் கேள்வி கேட்டிருந்தார்.

மௌனம் காத்த ஜெய்சங்கர்.. மீண்டும் கேள்வி எழுப்பிய ராகுல்

ராகுலின் அந்த பதிவிற்கு இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படாததால், மீண்டும் தனது சமூக வலைதளத்தில் இன்று பதிவிட்டள்ள ராகுல் காந்தி, வெளியுறவுத்துறை அமைச்சரின் மௌனமே சொல்லவில்லையா, இது கேவலமானது என்று கூறியுள்ளார்.

அதனால், நான் மீண்டும் கேட்கிறேன், பாகிஸ்தானுக்கு தகவல் தெரிந்ததால், எத்தனை இந்திய விமானங்களை நாம் இழந்தோம் என கேட்டுள்ளார்.

மேலும், இது ஒரு தவறு இல்லை, அது ஒரு குற்றம் என கூறியுள்ள ராகுல் காந்தி, உண்மையை தெரிந்துகொள்ள இந்த தேசத்திற்கு தகுதி உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.