MP Rahul Gandhi:தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை: குழப்பத்தில் இளைஞர்கள்! போட்டுத்தாக்கும் ராகுல் காந்தி!
MP Rahul Gandhi: இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனை குறித்து எம்.பி. ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நிலவும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு தேசிய ஜனநாயக கூட்டணி, ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இரண்டும் சரியான தீர்வை வழங்கவில்லை என நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ராகுல் காந்தி நாட்டில் வளர்ச்சி, பட்ஜெட், வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றை குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர் பேசுகையில்,” குடியரசு தலைவர் உரையில் எந்தவித சிறப்பும் இல்லை. அதே ’laundry list’ போல இருக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. நாட்டின் வளர்ச்சி மிகவும் மெதுவாகவே உள்ளது. வேலையில்லா திண்டாட்டம் இருக்கிறது. இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உற்பத்தி துறையில் இந்தியா கவனம் செலுத்த வேண்டியுள்ளது.” என்று குறிப்பிட்டார்.
வேலைவாய்ப்பின்மை குறித்து பேசுகையில், “ நாட்டில் இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடி வருகின்றனர். பலரும் வேலை தேடி வருகின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணி (NDA), ஐக்கிய முற்போக்கு கூட்டணி ( UPA ) என இருவரின் ஆட்சியிலும் வேலைவாய்ப்பின்மை பிரச்சனைக்கு சரியான தீர்வோ அல்லது இளைஞர்களுக்கு பதிலோ அளிக்கவில்லை.” என்றார்.
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேலைவாய்ப்பின்மையால் திண்டாடும் இளைஞர்கள் பற்றி குறிப்பிட்டு பேசுகையில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சியிலோ அல்லது இப்போது ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சியிலோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.
”‘Make in India’ இந்தியா திட்டம் நல்ல ஐடியா; ஆனால், அதன் செயல்பாடு சிறப்பாக இல்லை. தோல்வியுற்ற திட்டமாகவே இருக்கிறது. உள்நாட்டிலேயே தயாரிப்பதை ஊக்குவிக்கும் வகையில் 2024-ல் பிரதமர் மோடியால் தொடங்கப்பட்டது. முதலீட்டாளர்கள் மாநாடு, ப்ரோமோசன் என எதுவாக இருந்தாலும் அதற்கான பலன் எதும் இல்லை. கடந்த 2014-ம் ஆண்டு 15.3 சதவீதமாக இருந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) தற்போது 12.6 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் மிகவும் குறைவான உற்பத்தி பங்களிப்பாகும். நான் பிரதமரை குறைகூறவில்லை. அவர் முயற்சி செய்யவில்லை என்று கூறுவது நியாயமாக இருக்காது. அவர் முயற்சித்தார் ஆனால் தோல்விடைந்தார் என்று சொல்லலாம்.” என உள்நாட்டிலேயெ உற்பத்தி திட்டம் பற்றி பேசினார்.