முதலமைச்சர் ஸ்டாலின் சூளுரை
அண்ணா நினைவு நாளை ஒட்டி அவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை! "வம்பிழுக்கும் வீணர்கள் தெம்பிழந்து ஓடுவார்கள்; நாம் மக்களின் அன்பையும் ஆதரவையும் பெற்று இலட்சியப் பயணத்தில் வெல்லப் பாடுபடுவோம்" எனவும் சூளுரை!
எடப்பாடி பழனிசாமி கண்டனம்
”தமிழ்நாட்டில் ஒரு ஏடிஜிபி-யை கொலை செய்யும் நோக்கில், அவரின் அரசு அலுவலகம் தீக்கிரையாக்கப் படுகிறது என்றால், இந்த ஆட்சியில் நடக்கும் முறைகேடுகளைச் சொன்னால், அது ஏடிஜிபி-யாக இருந்தால் கூட, மிரட்டலும் கொலையும் தான் பதிலா?” - எடப்பாடி பழனிசாமி கேள்வி
இன்றுடன் ஓய்கிறது பரப்புரை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதையொட்டி திமுக மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து, வரும் 5ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கை
தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை 90 ஆக உயர்த்த தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு. தற்போது அமைக்கப்பட்டு வரும் 963 கி.மீ. நீளமுள்ள நெடுஞ்சாலை பணிகள் முடிந்ததும், சுங்கச்சாவடிகளை உயர்த்த திட்டம். தமிழ்நாட்டில் தற்போது 72 சுங்கச்சாவடிகள் உள்ளன.
ஆபரணத் தங்கத்தின் விலை சரிவு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவை கண்டு, பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, சவரனுக்கு 680 ரூபாய் குறைந்து 61 ஆயிரத்து 640 ரூபாய்க்கும், கிராமுக்கு 85 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 705 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
நாடாளுமன்ற கூட்டுக்குழு அறிக்கை இன்று தாக்கல்
வக்ஃப் வாரிய திருத்த மசோதா தொடர்பான கூட்டுக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கலாகிறது. எதிர்க்கட்சிகள் கொடுத்த திருத்தங்களை நிராகரிப்பு செய்த கூட்டுக்குழு, பாஜக கூட்டணி எம்.பி.க்கள் தந்த 14 திருத்தங்களை வாக்கெடுப்பு அடிப்படையில் ஏற்றது. 2024ல் தாக்கல் செய்யப்பட்ட வக்ஃப் வாரிய திருத்த மசோதாவுக்கு எதிர்க்கட்டுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகள் வெளியீடு
தெலங்கானா மக்கள் தொகையில் 46.25% பேர் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என சாதிவாரி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அடுத்தபடியாக பட்டியல் சமூகத்தினர் 17.43%, பழங்குடியினர் 10.45%, முஸ்ஸீம் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08% உள்ளனர். காங்கிரஸ் கட்சி அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் தெலங்கானாவில் கடந்த ஆண்டு நவம்பர் 6ம் தேதி தொடங்கிய கணக்கெடுப்பு 50 நாட்கள் நடைபெற்றது.
மும்பை பங்குச்சந்தை சரிவு
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 745 புள்ளிகள் சரிந்து 76,763 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 250 புள்ளிகள் சரிந்து 23,232 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இதனிடையே, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில், 87 ரூபாய் 31 காசுகளாக சரிந்துள்ளது.
வருண் சக்ரவர்த்தியை பாராட்டிய இந்திய அண் கேப்டன்
வருண் சக்கரவர்த்தி இடைவிடாமல் பவுலிங் பயிற்சி மேற்கொள்வார். புதுசு புதுசாக எதையாவது கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவருக்கு அதிகம். அதற்கான பலன் கிடைத்துவிட்டது” இங்கிலாந்திற்கு எதிரான் டி20 தொடரில், 'தொடர் நாயகன்' விருதை வென்ற வருண் சக்கரவர்த்திக்கு கேப்டன் சூர்ய குமார் யாதவ் புகழாரம்
குகேஷை வீழ்த்திய பிரஞ்ஞானந்தா!
நெதர்லாந்து நாட்டில் நடைபெற்ற 2025 டாடா ஸ்டீல் செஸ் மாஸ்டர்ஸ் தொடரில் குகேஷை வீழ்த்தி பிரஞ்ஞானந்தா வெற்றி. இறுதிச்சுற்றில் நடந்த டை பிரேக்கர் சுற்றில் இருவரும் மோதினர்.