சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருவதை எதிர்த்து பேரணி மேற்கொண்ட ராகுல் காந்தியை  போலீசார் கைது செய்தனர்.






பேரணியில் ஈடுபட்ட ரஞ்சித் ராஜன், (Ranjeet Ranjan)  கே.சி. வேணுகோபல் (KC Venugopal,) மாணிக்கம் தாகூர் (Manickam Tagore) இன்ரான் பிரதாப்கிரி (Imran Pratapgarhi), கே. சுரேஷ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.






நேசனல் ஹெரால்ட் வழக்கு தொடர்பாக சோனியா காந்தியிடம் இரண்டாவது நாளாக விசாரணை நடைபெற்று வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர், நாடாளுமன்றத்தில் காந்தி சிலையில் இருந்து குடியரசுத் தலைவர் மாளிகை நோக்கி  பேரணியில் ஈடுபட்டனர்.






விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாக பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ராகுல்காந்தி தலைமையில்  ப.சிதம்பரம்  உள்ளிட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் இதில் கலந்துகொண்டனர்.


 








மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண