Rahul Gandhi: தெலங்கானா மாநிலத்தில் நடைப்பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, தன்னை தானே சாட்டையால் அடித்தும் கொள்ளும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். கட்சியை மீண்டும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், ராகுல் காந்தி தன்னுடைய பயணத்தை தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் செப்டம்பர் 7ஆம் தேதி தொடங்கினார். கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பயணம் தற்போது 57-வது நாளை எட்டியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவை அடுத்து தற்போது தெலங்கானாவில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 1,290 கி.மீ வரை யாத்திரை மேற்கொண்டிருக்கிறார். இதனை அடுத்து கடந்த 23ஆம் தேதி தெலங்கானா மஹபூப் நகர் குடிபெல்லாவை வந்தடைந்தார். தெலங்கானா வந்தடைந்த ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று தெலக்கானா மாநிலம் ஹதராபாத்தில் ரூத்ராராமில் இருந்து இன்று அதிகாலையில் நடைப்பயணத்தை தொடங்கினார். அப்போது அந்த பகுதியில் நடைபெற்றுக் கொண்டிருந்த பொணாலு பண்டிகையில் ராகுல் காந்தி பங்கேற்றுக் கொண்டார். பண்டிகையில் பழங்குடியினாரால் மேற்கொள்ளப்படும் பாரம்பரிய நடனத்தை கண்டு ரசித்தார். பின்பு அவரும் அந்த நடனத்தில் கலந்து கொண்டார்.
அதன் பின்பு அந்த இடத்தில் தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்டு நடனம் ஆடியவர் வைத்திருந்த சாட்டையினை ராகுல் காந்தி வாங்கி, தன்னை தானே அடித்துக் கொண்டு நடனம் ஆடினார். அவர் அடித்தும் கொள்ளும் அந்த இடத்தில் இருந்த தொண்டர்கள் அனைவரும் சத்தம் போட்டனர். இது குறிப்பான புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்த பயணம் 57 நாட்களை கடந்துள்ள நிலையில், அவர் தினந்தோறும் மக்களை கவர்ந்து கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
5G: ஆப்பிள் வாடிக்கையாளரா நீங்க ? அப்போ ஒரு குட் நியூஸ் உங்களுக்கு.. நிறுவனம் வெளியிட்ட தகவல்