டெல்லியில் தேர்தல் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.


டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எம்.பி ராகுல்காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் நீல நிற வேகன் ஆர் பற்றிக் குறிப்பிட்டார். கெஜ்ரிவால் முதல் முறையாக டெல்லி முதல்வராக ஆனபோது அவரது முதன்மை வாகனமாக நீல நிற வேகன் ஆர் இருந்தது என குறிப்பிட்டார்.


கூட்டத்தில் பேசிய அவர், “அரவிந்த் கெஜ்ரிவால் வித்தியாசமான அரசியல் செய்வேன் என்று சொன்னார். அதைதான் செய்து வருகிறார். அரவிந்த் கெஜ்ரிவால் வித்தியாசமாக அரசியல் செய்வதாக உறுதியளித்து டெல்லிக்கு மிகப்பெரிய மதுபான ஊழலைக் கொடுத்தார். சிறிய காரில் வந்தார். ஆனால் இப்போது ஷீஷ் மஹாலில் வசித்து வருகிறார்.


டெல்லி வன்முறையை எதிர்கொண்டபோது அரவிந்த் கெஜ்ரிவால் எங்கே சென்றார் எனத் தெரியவில்லை.


ஏழைகளுக்குத் தேவைப்படும்போதும், டெல்லி வன்முறையை எதிர்கொண்டபோதும் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை ஒருபோதும் காணவில்லை” எனத் தெரிவித்தார்.


மேலும், டெல்லி கலால் கொள்கை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டதற்காக மணீஷ் சிசோடியா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோரையும் அவர் கடுமையாக சாடினார்.


தொடர்ந்து “பட்பர்கஞ்ச் எம்.எல்.ஏ மணீஷ் சிசோடியா, அரவிந்த் கெஜ்ரிவாலுடன் சேர்ந்து மதுபான ஊழலை உருவாக்கியவர். அதனால்தான் சிசோடியா அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்” எனத் தெரிவித்தார்.


மதுபான ஊழல் தொடர்பாக சிசோடியாவும் கெஜ்ரிவாலும் பல மாதங்கள் சிறையில் இருந்தனர். கடந்த ஆண்டு அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.


டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஜங் புரா தொகுதியில் மணிஷ் சிசோடியா போட்டியிடுகிறார்.


பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெறும் சட்டமன்றத் தேர்தலில் புது தில்லி தொகுதியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடும் சந்தீப் தீட்சித்துக்கு ஆதரவாக ராகுல் காந்தி பிரச்சாரம் செய்தார்.


ஹரியானாவில் உள்ள பாஜக அரசு டெல்லியில் பாயும் யமுனை நீரில் அம்மோனியாவை விஷமாக்கியதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார்.


கெஜ்ரிவாலின் குற்றச்சாட்டு பொய்யானால், அது தேசத்துரோகத்திற்குச் சமம் என்று டெல்லி காங்கிரஸ் இன்று கூறியது.


70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்கு பிப்ரவரி 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது, வாக்குகள் பிப்ரவரி 8 ஆம் தேதி எண்ணப்படும்.


2020 சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றது.