உத்தரப் பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸின் முகமாக முன்னிறுத்தப்பட்டுள்ள அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தேர்தல் பணிகளில் தீவிரமாக இருந்து வருகிறார்.


செவ்வாய் அன்று பேஸ்புக்கில் நேரலையின் போது, காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி பொதுவாக தனது குழந்தைகளுக்கு வீட்டுப் பாடம் செய்ய உதவுவது மட்டுமின்றி அவர்களது நண்பர்களுக்கும் உதவுவதாகக் கூறினார்.


 






மேலும் கூறுகையில், குழந்தைகள் தினந்தேறும் வீட்டுப்பாடங்களில் தங்களுக்கு இருக்கும் சந்தேகங்களை கேட்கின்றன. எனது குழந்தைகளும் வீட்டுப்பாடத்தில் ஏற்படும் சந்தேகத்தை என்னிடம் கேட்பார்கள். சில நேரங்களில், நான் தேர்தல் பிரச்சாரத்தை முடித்து விட்டு வீடு திரும்பும் போது, ​​நான் என் குழந்தைகளுடன் காலை 3 - 4 மணி வரை உட்கார வேண்டியிருக்கும், அவர்களின் வீட்டுப் பாடம் முடிவடையும் வரை நான் அவர்களுடன் இருப்பேன்" என்று பிரியங்கா காந்தி கூறினார்.


மேலும் ​​அவர் தனது குழந்தை பருவத்தில் தனது சகோதரர் ராகுல் காந்தியுடன் கடுமையாக சண்டையிட்டதையும் வெளிப்படுத்தினார். ஆனால், வெளியாட்கள் யாரேனும் அவர்களுக்கு இடையூறு செய்ய முயன்றால், சகோதரன் - சகோதரிகளாக இருவரும் ஒன்றிணைந்து சண்டையிடுவோம். என் பாட்டி கொலை செய்யப்பட்ட பிறகு நான் வீட்டில் இருந்தே கல்வி பயின்றேன். அந்த சூழலில் அதிகம் தனிமையில் தான் இருந்தேன். அப்போது ராகுல் காந்தியும் நானும் நிறைய சண்டை போட்டிருக்கிறோம். அதேபோல நட்பாகவும் இருந்திருக்கிறோம.


50 வயதான பிரியங்கா காந்திக்கு மிராயா வத்ரா 18, மற்றும் ரைஹான் வத்ரா 20 என்னும் இரு குழந்தைகள் உள்ளனர்.