வாக்காளர் பட்டியல் குளறுபடி

நாடு முழுவதும் வாக்காளர் பட்டியில் திருத்த பணியானது நடைபெற்று வருகிறது. இதில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கியுள்ள பீகாரில் பல லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து காங்கிரஸ் மூத்த தலைவரும், எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி பாரதிய ஜனதா கட்சி  மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வாக்கு திருட்டில் ஈடுபட்டுள்ளதாக கடுமையான குற்றச்சாட்டுகளை ஏற்கனவே முன்வைத்திருந்தார்.  நாளை பீகார் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ள பரபரப்பான சூழ்நிலையில் மீண்டும் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, வாக்கு திருட்டு தொடர்பாக ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Continues below advertisement

ஆதாரத்துடன் புகார் தெரிவித்த ராகுல் காந்தி

அப்போது பேசிய அவர், பீகார், மஹாராஷ்டிரா, மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களை போல் ஹரியானாவிலும் வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாகவே இந்த தேர்தல்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சியால் வெற்றிபெற முடியவில்லையென புகார் தெரிவித்தார். ஹரியானா தேர்தலில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாக கூறிய ராகுல் காந்தி, தேர்தல் முறைகேடுகளைப் புரிந்து Gen Z வாக்காளர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும் போலி புகைப்படங்கள் கொண்ட வாக்குகளை நீக்குவதற்கு மென்பொருள் இருந்தும் தேர்தல் ஆணையம் அதை ஏன் பயன்படுத்துவதில்லை என கேள்வி எழுப்பினார். 

ஹரியானாவின் ஹோடல் என்ற தொகுதியில் ஒரே வீட்டில் 501 வாக்காளர்கள் வசிப்பதாகக் கூறி மாபெரும் மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும், ராய் தொகுதியில் ஒரே வீட்டில் 108 வாக்காளர்கள் இருப்பதாக வாக்காளர் பட்டியலில் பதிவிடப்பட்டுள்ளதாகவும், பாஜக நிர்வாகி ஒருவர் வீட்டில் மட்டும் 66 வாக்குகள் உள்ளதாக போலியாக பதிவு செய்து மோசடி செய்யப்பட்டுள்ளதாக அடுத்தடுத்து ஆதாரங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.  இதுமட்டுமில்லாமல் ஒரு பிரேசிலிய மாடல் அழகியின் புகைப்படத்தை பயன்படுத்தி வெவ்வேறு பெயர்களில் 22 முறை வாக்காளர் பட்டியில் இடம்பெற்றுதாகவும்  குற்றம்சாட்டினார்.எனவே இந்த வாக்காளர் பட்டியலின் நம்பகத்தன்மை குறித்த ராகுல் காந்தி கேள்விகளை எழுப்பினார். 

Continues below advertisement

வாக்காளர் பட்டியலில் பிரேசில் அழகி படம்

ஒரு புகைப்படத்தை வைத்து 223 வாக்காளர்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அதன்படி பார்த்தால் ஹரியானாவில் 8 வாக்காளர்கள் ஒருவர் போலியான வாக்காளர் என தெரிவித்த ராகுல் காந்தி,  இது தொடர்பாக 100% ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் குறிப்பிட்டார். ஹரியானாவில் இரண்டு கோடி வாக்காளர்கள் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டுள்ளதாகவும் தேர்தல ஆணையத்தின் மீது குற்றம்சாட்டினார்.