• கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் சுமார் 4 மணி நேரம் கழித்து தான் போலீசாரால் பாதிக்கப்பட்ட பெண்ணை கண்டுபிடிக்க முடிந்ததா என சரமாரியாக கேள்வியெழுப்பியுள்ளார்.
  • தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை 11 மணிக்கு மேல் நடைபெறுகிறது. 10.30 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் கட்சியின் நிர்வாகிகள் வர தாமதமானதால் ஒத்தி வைக்கப்பட்டது.
  • அதிமுகவில் நிலவி வரும் பல்வேறு எதிர்பாராத சம்பவங்களுக்கு மத்தியின் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
  • சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.11, 180க்கும், சவரன் ரூ. 89,440க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • உத்தரப்பிரதேச மாநிலம் மிர்சாப்பூரில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 5 பேர் மீது ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அங்குள்ள சுனார் ரயில் நிலையத்தில் இந்த சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
  • மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கிடையே பீகார் சட்டமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை (நவம்பர் 6) நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு முன்னேற்பாடு பணிகள் நிறைவடைந்துள்ளது.  இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி 160 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
  • டெல்லியில் இன்று நண்பகல் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். வாக்கு திருட்டு தொடர்பான தகவல்களை அவர் வெளியிடுவார் என சொல்லப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
  • ஹாக்கி இளையோர் போட்டிக்கான வெற்றிக்ம் கோப்பையை முதலமைச்சர் ஸ்டாலின் அறிமுகம் செய்தார். அதேசமயம் 14வது ஆடவர் இளையோர் ஹாக்கி போட்டிக்கான இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது. 
  • மிகப்பெரிய போட்டிகளுக்கு மத்தியில் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் தான் முதல் இஸ்லாமியர் மற்றும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்ற சிறப்புக்கும் சொந்தக்காரராகி உள்ளார். ஸோரான் மம்தானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
  • 50 ஓவர் மகளிர் உலகக்கோப்பையில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியில் விளையாடிய 15 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கப்படும் என ஐசிசி அறிவித்தது. ஆனால் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த பிரதிகா ராவல் காயம் காரணமாக இறுதிப்போட்டியில் விளையாடவில்லை.இதனால் அவருக்கு பதக்கம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளதற்கு பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.