ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன். இவர் தற்போது தமிழ்நாடு அரசின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், டெல்லியில் இன்று பொருளாதாரம் தொடர்பான கருத்தரங்கில் ரகுராம்ராஜன் பங்கேற்றார்.


அந்த கருத்தரங்கில் அவர் பேசியதாவது, “ சிறுபான்மையினருக்கு எதிராக நாடாக இந்தியா மீது உருவாகும் பிம்பம் இந்திய நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம். இந்தியா குறித்து உலக சந்தையில் நல்ல மதிப்பை ஏற்படுத்துவது பொருளாதார வளர்ச்சிக்கு அவசியம். அனைத்து குடிமக்களையும் சமமாக மதிக்கம் ஜனநாயக நாடாக இந்தியாவை உலக நாடுகள் மதிக்க வேண்டும்.




இது ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு அடிப்படை. ஆனால், சிறுபான்மையினருக்கு எதிராக நாடாக இந்தியா மீது உருவாகும் பிம்பம், இந்தியாவின் மீது வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தும். மேற்கத்திய நாடுகளின் மனநிலையை இந்தியா புரிந்து கொள்ள வேண்டும். உக்ரைன் நாடு ஜனநாயக விஷயங்களை பின்பற்றுவதால், அந்த நாட்டிற்கு மேற்கத்திய நாடுகள் ஆதரவை தெரிவித்து வருகின்றன. அதேசமயம் உய்கர் மற்றும் திபெத் சிறுபான்மை மக்களை முறையாக நடத்தாத சீனா மீது இந்த நாடுகள் நம்பிக்கை கொள்வதில்லை. எனவே, சேவைத்துறையில் சர்வதேச அளவில் இந்தியா கொண்டிருக்கும் வாய்ப்பை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். அமலாக்கத்துறை, சி.பி.ஐ. போன்ற அமைப்புகள் இந்தியாவின் ஜனநாயகத் தன்மையை தகர்த்து வருகின்றன.”


இவ்வாறு அவர் கூறினார்.




ரகுராம் ராஜன் மத்திய பா.ஜ.க. அரசின் பல்வேறு கொள்கைகளை கடுமையாக விமர்சித்த வருகிறார். இந்த நிலையில், தற்போது சிறுபான்மையின மக்களுக்கு எதிரான கொள்கைகளை தவற விட வேண்டும் என்று ரகுராம்ராஜன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண