2016-ஆம் ஆண்டு போடப்பட்ட ரஃபேல் ஒப்பந்தத்தில் முறைகேடு மற்றும் ஊழல் நடைபெற்று உள்ளதாக பிரான்சு நாட்டின் மீடியா பார்ட் என்ற செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பிரான்சு நாட்டில் நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் ரஃபேல் விவகாரம் மீண்டும் இவ்வளவு பெரிதாக வெடிக்க காரணம் என்ன? இதனால் இந்தியாவில் ஏற்படப் போகும் அரசியல் பாதிப்பு என்ன?


ரஃபேல் விவகாரம் மீண்டும் வெடிக்க காரணம் என்ன?


ரஃபேல் ஊழல் தொடர்பாக மீடியா பார்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியின்படி பிரான்சு நாட்டின் டஸ்ஸால்ட் 94 சதவிகிதம் முதலீடு செய்துள்ளது. ஆனால் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு 51 சதவிகித பங்குகள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அகஸ்டா வெஸ்ட் லாண்ட் ஊழலில் தொடர்புடைய நபரான சுஷன் குப்தாவிற்கு இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் தெரியும் என்று கூறப்படுகிறது. அத்துடன் இந்தியாவின் தேவைகள் என்பது தொடர்பாக முறையான ஆவணம் வருவதற்கு முன்பாகவே டஸ்ஸால்ட் நிறுவனத்திற்கு விவரங்கள் தெரியும் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. 




இந்தத் தகவலை பகிர்ந்தற்காக சுஷேன் குப்தாவிற்கு டஸ்ஸால்ட் நிறுவனம்  பண பரிவர்த்தனைகளும் செய்துள்ளதாக கூறப்படுகிறது.  இந்த அறிக்கை வைத்து பிரான்சு நாட்டின் தன்னார்வு தொண்டு நிறுவனம் ஒன்று புகார் அளித்தது. இந்தப் புகாரை விசாரிக்க பிரான்சு அரசு சார்பில் ஒரு நீதிபதி விசாரணை செய்ய உத்தரவிட்டப்பட்டுள்ளது. 


இந்த வழக்கில் அடுத்து என்ன?


பிரான்சு நாட்டில் பொதுவாக ஊழல் புகார் மீது நீதிபதி விசாரணை விரைவாக அறிவிக்கப்படுவதில்லை. ஆனால் அப்படி ஒரு நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் பட்சத்தில், இந்த நீதிபதிக்கு நிறையே அதிகாரம் வழங்கப்படும். அவர் எந்த ஒரு அதிகாரியையும் விசாரிக்க யாரிடமும் அனுமதி கேட்க தேவையில்லை. இந்த விசாரணையில் முறையான ஆவணங்கள் கிடைக்கும் பட்சத்தில் வழக்கு நீதிமன்றத்திற்கு செல்லும். அதன் பின்னர் தண்டனை வழங்கப்படும். 


இதனால் இந்திய அரசியலில் நிகழக்கூடிய தாக்கம் என்ன?


ஏற்கெனவே ரஃபேல் தொடர்பான நீதிபதி விசாரணை இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் கட்சி இந்த விசாரணையை சுட்டிக்காட்டி ரஃபேல் ஊழல் வெளியே வருகிறது என்று கூறி வருகிறது. அத்துடன் இந்த ஊழல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழு விசாரணையும் தேவை என்று கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்கு பாஜக,”இந்த விவகாரம் தொடர்பாக ஒரு தனியார் தொண்டு நிறுவனம்தான் புகார் அளித்துள்ளது. அதில் ஊழல் நடைபெற்றதாக இன்னும் நிருபணம் ஆகவில்லை” எனக் கூறி வருகிறது. இந்த விவகாரம் மீண்டும் ஆளும் பாஜக அரசிற்கு எதிராக பல விமர்சனங்கள் வர வழிவகை செய்துள்ளது. 




ஃபேல் பின்னணி:


ஜனவரி 31 ,2012ம் ஆண்டில் மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் 126 ஜெட் ரபேல் போர் விமானங்களை வாங்குவது என்றும். இவற்றில் 18 விமானங்கள் பறப்பதற்குத் தயார் நிலையில் தரப்படும். மீதமுள்ள 108 விமானங்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படும். இதற்கான தொழில்நுட்பத்தை டஸ்ஸால்ட் நிறுவனம் வழங்க இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஹெச்ஏஎல் (ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட்) விமானங்களை உற்பத்தி செய்யும் என முடிவானது. இதன்படி ஹெச்ஏஎல் – டஸ்ஸால்ட் இரு நிறுவனங்கள் இடையேயான வேலை ஒப்பந்தம் 2014 மார்ச்சில் கையெழுத்தானது.


பின்பு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்தினால் 2015ம் ஆண்டு ஏப்ரலில் தலைமை அமைச்சர் மோடி அவர்கள் முன்பு எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்கப்போவதாக அறிவித்து, 126 விமானங்களுக்கான முந்தைய ஒப்பந்தம் காலாவதி ஆகிவிட்டது என்று அறிவித்தார் அன்றைய பாதுகாப்புத் துறைக்குப் பொறுப்பாக இருந்த மனோகர் பாரிக்கர் முன்னிலையில் 2016 செப்டம்பரில் ரிலையன்ஸ்-டஸ்ஸால்ட் நிறுவனங்களுக்கிடையில் ரபேல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தச் சூழலில் ரஃபேல் ஊழல் தொடர்பாக இந்தியாவில் புகார்  எழுந்தது. இந்தப் புகார் தொடர்பாக 2019ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழக்கு ஒன்றை விசாரித்தது. அதில் ரஃபேல் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதாக காட்டும் ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: அமேசானின் அடுத்த தலைவராக பொறுப்பேற்கும் ஆண்டி ஜாஸி..! யார் இவர்?