அம்பானியின் மருமகள்:
உலகின் முன்னணி தொழிலதிபரான முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு (Anant Ambani) திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. ஆனந்த் அம்பானி தனது தோழியான ராதிகா மெர்ச்சன்ட் (Radhika Merchant)- ஐ திருமணம் செய்ய இருக்கிறார்.
இராஜஸ்தானின் நாதுவாராவிலுள்ள ஸ்ரீநாத்ஜி கோயிலில் ஆனந்த அம்பானி - ராதிகா மெர்ச்சன்ட் இருவருக்கும் இன்று திருமணம் நிச்சய நிகழ்ச்சி (roka ceremony) நடைபெற்றது. இதில் முகேஷ் அம்பானி, நீதா அம்பானி, ராதிகாவின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது. நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் மருமகளாக போகும் ராதிகா மெர்ச்சன்ட் யார்? அவருடைய பெற்றோர் யார்? என்ன செய்கிறார்கள் என்ற தெரிந்துகொள்ளும் ஆர்வம் இருப்பது புரிகிறது. ராதிகா மெர்ச்சன்ட்-ன் யார் என்பது பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
தொழிலதிபரின் மகள்:
ஷைலா - வீரேன் மெர்ச்சன்ட் ஆகியோரின் மகள் ராதிகா மெர்ச்சன்ட். இருவரும் என்கோர் ஹெல்த்கே (Encore Healthcare) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரிகளாக பொறுப்பு வகிக்கின்றனர். வீரேன் மெர்ச்சன்ட் பெரும் தொழிலதிபர் ஆவார்.
இளமைப் பருவம்:
ராதிகா மும்பையில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரம் துறையில் பட்டம் பெற்றார். தற்போது, என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநகராக பதவி வகிக்கிறார்.
பணி:
இவர், என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இணைவதற்கு முன்பு, 2017ம் ஆண்டு இஸ்பர்வா (Isprava) என்ற பெரிய தனியார் நிறுவனத்தில் வேலை பாத்திருக்கிறார்.
பரதநாட்டியம்:
ராதிகா சிறுவயதில் இருந்தே பல்வேறு கலைகள் கற்று கொள்வதில் ஆர்வமுடன் இருந்தார். 24 வயதான ராதிகா, தேர்ந்த பரதநாட்டிய கலைஞர். மும்பையில் உள்ள ஜியோ வோல்டு சென்டரில் இவருடைய பரதநாட்டிய அரங்கேற்றம் பிரம்மாண்ட நிகழ்ச்சியாக நடைபெற்றது.
ராதிகாவிற்கு பிரியமான பொழுதுப்போக்கு நீச்சல். நேரம் கிடைக்கும்போது நீச்சல் பயிற்சி மேற்கொள்வார். மலை ஏறுதல், புத்தகம் வாசித்தல் ஆகியவற்றுடன் நண்பர்களுடன், மனதுக்கு பிடித்தமானவர்களுடன் நேரம் செலவிடுவது இவரின் பொழுதுப்போக்கு.
ஆனந்த - ராதிகா காதல் கதை :
ஆனந்த - ராதிகா இருவரும் நண்பர்கள். பின்னர் காதலித்து வந்துள்ளனர். இப்போது விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.