அரசியலமைப்புச் சட்டத்தில் நிரந்தர மாற்றம் செய்த பிறகு ஒரே நாடு ஒரே தேர்தல் அமல்படுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


வருங்காலத்தில் ஆட்சிக்கு வருவோர் மீண்டும் சட்டத்தை மாற்றம் செய்யாத வகையில் அமல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் சிங் கூறினார். முன்னதாக, ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பாக சட்டக் குழு பரிசீலிபத்தாக சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்து இருந்தார்.


நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது, "அடிக்கடி தேர்தல் நடத்துவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அத்தியாவசிய சேவைகள் தடைபடுகிறது. செலவினமும் அதிகமாகிறது. ஆகையால் நாடாளுமன்ற தேர்தலையும் சட்டப்பேரவை தேர்தல்களையும் ஒருசேர நடத்துவது தொடர்பாக சட்டக்குழு பரிசீலனை செய்கிறது" என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்திருந்தார்.


முன்னதாக, மக்களவைக்கும் மாநிலங்களுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் செலவை மிச்சப்படுத்தலாம் என மத்திய அரசு நினைக்கிறது.


இதுதொடர்பாக பல்வேறு தரப்புகளிடம் இருந்து கருத்துக்களை மத்திய அரசு பெற முடிவு செய்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜனவரி 16 ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க இந்திய சட்ட ஆணையத்தின் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி கடிதம் அனுப்பினார்.


6 PM Headlines: 6 மணி தலைப்புச்செய்திகள்..! ஒரே நிமிடத்தில் உங்களைச் சுற்றி நிகழ்ந்ததை அறிய..?


சட்ட ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொது செயலாளர் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஜி-20 மாநாடு தொடர்பாக பிரதமர் தலைமையில் நடைபெற்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமிக்கு மத்திய அரசு அழைப்பு வழங்கியது.


மேலும் இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அதிமுகவின் வரவு - செலவு குறித்து விபரங்களை தேர்தல் ஆணைய பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.