செண்டை மேளம்:


செண்டை மேளம் என்றதும் நம் நினைவுக்கு வருவது அந்த மேளம் தரும் அதிர்வுதான். செண்டை  மேளத்தை  இசைப்பவர்களை பார்த்தால் தங்கள் உடலில் உள்ள மொத்த சக்தியையும் ஒன்று திரட்டி அடித்து நொறுக்குவது போல தெரியும்.  இசைக்கு எல்லை இல்லை என்பது போன்று ஒரு பெண் செண்டை மேளம் இசைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. யார் வேண்டுமென்றாலும் இசையை கற்கலாம் என்பது போல அந்த பெண்ணின் செண்டை மேளம் இசை இருந்தது.


கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள கண்டாணசேரி பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகுமார் மற்றும் ரஷ்மி தம்பதியினரின் மகள் சில்பா. இவருக்கும் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த தேவ ஆனந்த என்பவருக்கும் கடந்த ஞாயிற்றுக்கிழமை குருவாயூர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.  


அசத்திய மணப்பெண்:


இருவரும் துபாயில்  ஐடி கம்பெணியில் பணிபுரிந்து வருகின்றனர். திருமணம் முடிந்து வரவேற்பு நிகழ்ச்சிக்காக மண்டபத்திற்கு வந்த சில்பா, தனக்கு செண்டை மேளம் அடிக்க ஆசையாக இருக்கிறது என்று கூறியுள்ளார். இதை அடுத்த மாப்பிளை வீட்டார்கள் சம்மதித்த பின்னர், சில்பா உற்சாகமாக ஆடியபடி செண்டை மேளம் அடித்து அசத்தியுள்ளார்.  அவரது தந்தை செண்டை வாசிப்பதில் வல்லவர். அதனால் ஷில்பா தனது தந்தையுடன் செண்டை மேளத்தை இசைத்தார். சில்பா செண்டை மேளம் இசைத்ததை அருகில் இருப்பவர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளனர்.






இந்த வீடியோ @LBH-Coach  என்ற ட்விட்டர் கணக்கில் வெளியிடப்பட்டது.  இந்த வீடியோவானது தற்போது, 1.69 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களையும், 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது.  பல பயனர்கள் மணமகளின் உற்சாகத்தையும் ஆர்வத்தையும் பாராட்டி வருகின்றனர்.






இந்த வீடியோவிற்கு பதலளித்த ஒருவர் கூறியதாவது, ” அந்த பெண் இசைப்பது தன்னை மெய்சிலிர்க்க வைப்பதாகவும், அவரது தந்தையுடன் இசைப்பது மிகவும் அருமையாக இருப்பதாக” பதிவிட்டிருந்தார். இதுபோன்று பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.