பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தில் உள்ள ஜெயில் கைதி ஒருவர், சிறை அதிகாரிகள் அவரது முதுகில் தீவிரவாதி என இரும்புக் கம்பியால் பொறித்து சித்திரவதை செய்ததாக புகார் அளித்திருக்கிறார். இந்த சம்பவத்தை பற்றி உடனடியாக விசாரிக்குமாறு பஞ்சாப் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. 


28 வயதான கரம்ஜித் சிங் என்பவர், கிட்டத்தட்ட 12 வழக்குகளின் கீழ் பதிவு செய்யப்பட்டு பஞ்சாப் மாநிலம் பர்னாலா சிறையில் சிறைவாசம் அனுபவித்து வருகிறார். இவருக்கு 20 ஆண்டுக்கால சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், வழக்கு விசாரணை ஒன்றுக்காக மான்சா மாவட்ட நீதிமன்றத்திற்கு அவர் அழைத்து செல்லப்பட்டுள்ளார். 


மேலும் படிக்க: Watch Video | ”இன்னும் ஏத்துக்க முடியல” - புனீத் ராஜ்குமாரின் நினைவிடத்தில் கதறி அழுத நடிகர் சூர்யா..!


அப்போது பேசிய அவர், தனது முதுகில் தீவிரவாதி என இரும்புக் கம்பியால் பொறித்து சிறை அதிகாரிகள் தன்னை சித்திரவதை செய்ததாக புகார் அளித்திருக்கிறார். இச்சம்பவத்திற்கு அகாலி தளம் கட்சித்தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கண்டனம் தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இதனால், இச்சம்பவம் பஞ்சாப் மாநில அரசின் கவனத்தை பெற்றுள்ளது.






இந்நிலையில், இப்புகார் குறித்து உடனடியாக விசாரிக்க வேண்டும் என பஞ்சாப் மாநில துணை முதலமைச்சர் சுக்ஜிந்தர் சிங் ரத்தாவா ஆணை பிறப்பித்துள்ளார். எனினும், பர்னா சிறை தரப்பு அதிகாரிகள் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கையில், இது போன்ற புகார்களை மறுத்துள்ளனர். 600 கைதிகள் உள்ள சிறைச்சாலையில் இரும்பு கம்பி கொண்டு ஒவ்வொருவரின் முதுகில் எழுதுவது எப்படி சாத்தியம் என சிறை அதிகாரி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்த விசாரணை முடக்கிவிடப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் பஞ்சாப் மாநிலத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண