இந்தியாவிலுள்ள சில வட மாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்த நாள் கோவர்தன் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையாக கொண்டாடப்படும். அந்த வகையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் கோவர்தன் பூஜை கொண்டாடப்படுவது வழக்கம். அந்தப் பூஜையின் போது அங்கு வருவபர்களுக்கு சவுக்கு அடி கொடுப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் இந்த பூஜையில் இன்று கலந்து கொண்டுள்ளார். சத்தீஸ்கரின் ஜன்கிரி கிராமத்தில் நடைபெற்ற பூஜையில் இவர் பங்கேற்று மக்களுடன் வழிப்பட்டுள்ளார். அதன்பின்னர் அந்தப் பூஜையில் அவர் சவுக்கு அடியையும் வாங்கியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.
இந்த பூஜையில் கலந்து கொண்டது தொடர்பாகவும் சத்தீஸ்கர் முதலமைச்சர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “கோவர்தன் பூஜை என்பது நாம் பசுக்களுக்கு செய்யும் மரியாதை. அதை நாம் ஆண்டு ஆண்டுக்காலங்களாக செய்து வருகிறோம். நம்முடைய பாரம்பரியம் மற்றும் மண்ணைச் சேர்ந்த பழக்க வழக்கங்களையும் கடைபிடிப்பது நம்முடைய கடமைகளில் ஒன்று” எனப் பதிவிட்டுள்ளார்.
முதலமைச்சர் ஒருவர் கோவர்தன் பூஜையில் பங்கேற்று சவுக்கு அடி பெற்று கொள்வது பெரும் வைரலாக தொடங்கியுள்ளது. மேலும் இந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களுடைய கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். இந்த வீடியோவை பலரும் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் படிக்க:பூம்பூம் மாடு.. Phone Pe.. டிஜிட்டல் புரட்சி.. வீடியோ வெளியிட்ட நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..