மீடியன் இல்லாத பாலம்.. கனமழையில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து.. திக் திக் நிமிடங்கள்!

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் மீடியன் இல்லாத பாலத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது.

Continues below advertisement

பஞ்சாப்பில் கனமழை பெய்து வரும் நிலையில், மீடியன் இல்லாத பாலத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது  கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் பயணம் செய்த 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

பஞ்சாப் மாநிலம் பதிண்டா நகரில் இந்த விபத்து நடந்துள்ளது. மீடியன் இல்லாத பாலத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. பெரும் கனமழை பெய்து வந்த நிலையில், கட்டுப்பாட்டை இழந்த பேருந்து பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், "20-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு, தல்வாண்டி சபோவில் இருந்து பதிண்டா நகரை நோக்கி பேருந்து சென்றிருக்கிறது. உள்ளூர்வாசிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மக்களை மீட்க உதவியதுடன், காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் குழுக்களுக்கு இணைந்து செயல்பட்டனர்.

இந்த விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததற்கு கனமழை காரணமா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது" என்றார்.

இந்தியாவில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 2021ஆம் ஆண்டு 4,12,432 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,53,972 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3,84,448 பேர் காயம் அடைந்துள்ளனர். 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2020-ம் ஆண்டு இந்தியாவில் 3,84,448 விபத்துகளில் 1,31,714 பேர் மரணம் அடைந்தனர். 3,48,279 பேர் காயம் அடைந்தனர்.

2021-ம் ஆண்டு தமிழகத்தில் 55,682 விபத்துகள் பதிவாகி உள்ளது. இதன்படி, அதிக விபத்துகள் பதிவான மாநிலங்களில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 10,000 சாலை விபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. 2021-ம் தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 15,384 பேர் மரணம் அடைந்தனர். இதன்படி அதிக மரணங்கள் பதிவான மாநிலங்களில் தமிழகம் 2-ம் இடத்தில் உள்ளது. 2020-ம் ஆண்டை விட 2021-ம் ஆண்டில் 5,000 மரணங்கள் அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க: ICAI CA Toppers: என்னது; 15% கூட தேர்ச்சி இல்லையா? ஆனாலும் திருப்பதிதான் முதலில்- சிஏ தேர்வு முடிவுகள் இதோ!

Continues below advertisement