Watch Video : நடைபயிற்சி மேற்கொண்டிருந்த மருத்துவர் மீது கார் மோதி 5 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 


மகாராஷ்டிரா மாநிலம் புனே பிம்கிரி சிக்வாக் என்ற பகுதியில் 47 வயதுடைய மருத்துவரான பலிராம் காத்வே அதிகாலை 5 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது பிடிஆர் சாலையில் அவர் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது அவருக்கு பின்னால் வேகமாக கார் ஒன்று வந்தது. அவருக்கு பின்னால் அதிவேகமாக வந்த கார், அவர் மீது மோதியது. கார் மோதியதில் மருத்துவர் 5 அடி உயரத்தில் தூக்கி வீசப்பட்டார். உடனே சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். 


உடனே சாலையோரத்தில் படுகாயமடைந்த மருத்துவர் பலிராம் காத்வேயே மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது விபத்தில் படுகாயமடைந்த மருத்துவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.






மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய கார் ஓட்டுரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ அங்கிருக்கும் சிசிடிவில் பதிவாகி உள்ளது. மேலும், இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




மேலும் படிக்க


Crime : மனைவியின் மாதவிடாய் ரத்தத்தை விற்ற கணவர், மாமியார்.. அகோரி பூஜைக்காக செய்த பகீர் செயல்..


Liquor Policy Case: திகார் சிறையில் சிசோடியா.. அடுத்த கைது கவிதாவா? இன்று அமலாக்கத்துறையில் நேரில் ஆஜர்!


Watch video: 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கிய காளை.. பதறவைக்கும் சிசிடிவி கேமரா காட்சிகள்!