நம் அனைவருக்கும் படிப்பு, தேர்வு என்றால் ஒருவித பதட்டம் ஒட்டிக்கொள்ளும். தேர்வு முடிவுகள் என்றாலே கொஞ்சம் பயந்துதான்போவோம். நேற்று நாடு முழுவதும் ஐ.சி.எஸ்.இ. (ICSE) பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. தேர்வு முடிவுகள் மாலை 5 மணி வெளியிடபப்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு காலையில் இருந்தே முடிவுகள் குறித்த ஆவலும் பதற்றமும் இருந்திருக்கும். மாணவர் ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் மும்பை காவல்துறையை டேக் செய்து தனது மனநிலை குறித்து பதிவு ஒன்றை எழுதியிருந்தார்.
துருவ் (Dhruv) சனிக்கிழமையன்று தனது டிவிட்டரில், "SUNDAY KO 5 BAJE KAUN RESULTS ANNOUNCE KARTA HAI ”(Who announces results at 5 pm on a Sunday!) " ஞாயிற்றுக்கிழமையில் யாராவது தேர்வு முடிவுகளை வெளியிடுவார்களா? என்று குறிப்பிட்டு சண்டே என்றாலே ஜாலியான நாள்,. அன்றைக்கு தேர்வு முடிவுகள் என்றால் பதற்றம் இன்னும் கூடுகிறதே என்பதுபோல தேர்வு முடிவுகள் குறித்த தனது பதற்றத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
பின்னர், தேர்வு முடிவு வெளியிடப்படும் நாளில் மும்பை மற்றும் மகாராஷ்டிரா காவல்துறையை டேக் செய்து ’இன்று எனது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. எனக்கு பயமாக இருக்கிறது.” என்று குறிப்பிட்டிருந்தார்.
துருவின் அச்ச மிகுந்த மனநிலையின்போது உறுதுணையுடன் இருக்க மும்பை போலீஸ் முடிவெடுத்தது. துருவிற்கு டிவீட் செய்துள்ள் மும்பை போலீஸ், “ துருவ், தேர்வு முடிவுகள் குறித்து கவலைப்படாதே! தேர்வு என்பது ஒருவித பயணம்தான். அதுகுறித்து அச்சம் கொள்ள தேவையில்லை. தேர்வு என்பதி உனது இறுதியான இலக்கோ அல்லது சாதனையோ அல்ல. மற்ற தேர்வுகள் போல இதுவும் ஒன்று. அவ்வளவுதான். இதற்கெல்லாம் பயப்படாதே! உன்னுடைய திறமைகள் குறித்து நம்பிக்கையில் உறுதியாய் இரு. உன் தேர்வு முடிவுகளுக்கு வாழ்த்துகள். Best of Luck for ICSE Results!" என்று துருவிற்கு அழகான மெசேஜ் செய்திருக்கின்றனர்.
இதற்கு துருவ் காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்வில் 83 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருப்பதாகவும் தனது டிவிட்டரில் பகிந்துள்ளார். துருவ் தேர்வு முடிவுகள் பயத்தைப் போக்க மும்பை காவல்துறையின் இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வார்த்தைகளில்தானே இந்த வாழ்வு உயிர்த்திருக்கிறது.