புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் வரும் நிலையில் கடற்கரைச் சாலை, துய்மா வீதி, செயின்ட் லூயிஸ் வீதி, புஸ்ஸி வீதி உள்ளிட்ட  White Town பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. மேலும்  காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையில் லாஸ்பேட்டை விமான நிலையச் சாலை முதல் லதா ஸ்டீல் ஹவுஸ் சந்திப்பு வரை கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள், பேருந்துகள் மற்றும் பள்ளி பேருந்துகள் உள்ளிட்டவை செல்ல அனுமதியில்லை.


போக்குவரத்து மாற்றம்:


அதேபோல காலை 10 மணி முதல் நண்பகல் 1 மணி வரையில் திண்டிவனம் வழியாக புதுச்சேரி நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும் கோரிமேடு கனரக வாகன சந்திப்பு சாலை வழியாக, மேட்டுப்பாளையம் சந்திப்பு, குண்டுசாலை சந்திப்பு, விழுப்புரம் சாலை, இந்திரா காந்தி சிலை சதுக்கம், நெல்லித்தோப்பு வழியாக புதுச்சேரி பேருந்து நிலையத்துக்கு திருப்பிவிடப்படும்.


சென்னையில் இருந்து இசிஆர் வழியாக புதுச்சேரி நோக்கி வரும் கனரக வாகனங்கள், பேருந்துகள் என அனைத்து வாகனங்களும் புத்துப்பட்டு ஐயனாரப்பன் கோவில் சந்திப்பு வழியாகத் திரும்பி செல்ல வேண்டும். சென்னையிலிருந்து திண்டிவனத்துக்கு ராஜீவ்காந்தி சிலை சதுக்கம் வழியாகச் செல்லும் வாகனங்கள் சாமிபிள்ளைத் தோட்டம் அருகே வலது பக்கம் திரும்பி தமிழ் ஒலி முதன்மைச் சாலை வழியாக லாஸ்பேட்டை சாலை, கல்லூரி சாலை, நாவற்குளம் வழியாகச் சென்று கோரிமேட்டை அடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் 6,7 மற்றும்‌ 8-ஆம்‌ தேதியில்‌ மட்டும்‌ இறந்தவரின்‌ இறுதி ஊர்வலத்திற்க்கு தேதி , நேரம்‌ மற்றும்‌ ஊர்வல பாதையுடன்‌ காவல்‌ துறையின்‌ அனுமதி பெற்ற பின்பு, புதுச்சேரி நகராட்சியால்‌ சவ அடக்க/தகன உத்திரவு வழங்கப்படும்‌ என தெரிவித்துள்ளனர்.


 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண