ஜல் ஜீவன் இயக்கம் (ஜே.ஜே.எம்) கடந்த 2019ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. 2024-ஆம் ஆண்டிற்குள் ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீரை வழங்குவதற்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது.
திட்டம் துவங்கப்பட்ட போது 3.23 கோடி (17%) கிராமப்புற வீடுகளில் மட்டுமே குழாய் நீர் இணைப்புகள் இருந்தன. 2024 ஆம் ஆண்டுக்குள் சுமார் 16 கோடி கூடுதல் வீடுகளுக்கு குழாய் நீரை வழங்குவதன் மூலமும், தற்போதுள்ள நீர் வழங்கல் அமைப்புகளின் செயல்பாட்டை உறுதி செய்வதன் மூலமும், 19 கோடிக்கும் அதிகமான கிராமப்புற குடும்பங்களுக்கு நேரடியாக பயனளிப்பதன் மூலமும் இந்த இடைவெளியைக் குறைப்பதை இந்த இயக்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜல் ஜீவன் இயக்கம் சாதித்தது என்ன?
இந்த முயற்சி கிராமப்புற-நகர்ப்புற இடைவெளியைக் குறைத்து பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. வீட்டிற்கு தண்ணீர் கொண்டு வரும் கடின உழைப்பிலிருந்து தாய்மார்கள் மற்றும் சகோதரிகளை விடுவிக்கவும், அவர்களின் சுகாதாரம், கல்வி மற்றும் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும் ஜல் ஜீவன் இயக்கம் பாடுபடுகிறது.
இந்த இயக்கம் கிராமப்புற குடும்பங்களுக்கு பெருமை மற்றும் கண்ணியத்தை சேர்க்கும் வகையில் 'வாழ்க்கையை எளிதாக்குகிறது'. ஜல் ஜீவன் இயக்கம், கழிவுநீர் மேலாண்மை, நீர் பாதுகாப்பு மற்றும் மழைநீர் சேகரிப்பு மூலம் ரீசார்ஜ் மற்றும் மறுபயன்பாடு போன்ற மூல நிலைத்தன்மை நடவடிக்கைகளை கட்டாய கூறுகளாக செயல்படுத்துகிறது.
குடிநீர் தொடர்பான சமுதாய அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்ட இந்த இயக்கம், விரிவான தகவல், கல்வி மற்றும் தொடர்பு பணிகளை முக்கிய அங்கமாகக் கொண்டதாக இருக்கும். அக்டோபர் 6, 2024 நிலவரப்படி, ஜல் ஜீவன் இயக்கம் 11.95 கோடி கூடுதல் கிராமப்புற வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்புகளை வெற்றிகரமாக வழங்கியுள்ளது.
100% வீடுகளுக்கு குழாய் நீர் இணைப்பு:
இது 15.19 கோடிக்கும் அதிகமான வீடுகளுக்கு மொத்த பாதுகாப்பைக் கொண்டு வந்துள்ளது, இது இந்தியாவின் அனைத்து கிராமப்புற குடும்பங்களில் 78.58% ஆகும். இந்த இயக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது, கிராமப்புற மக்களின் வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவா, அந்தமான் நிக்கோபார் தீவுகள், தாத்ரா நகர் ஹவேலி & டாமன் டையூ, ஹரியானா, தெலங்கானா, புதுச்சேரி, குஜராத், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மிசோரம் மற்றும் அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 11 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள் அந்தந்த மாநிலம் / யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும் (100%) குழாய் நீர் இணைப்பை வழங்கியுள்ளன.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமப்புற வீட்டிற்கும் குழாய் நீர் இணைப்பை வழங்குவதற்கான அதன் லட்சிய இலக்கை அடைவதில் ஜல் ஜீவன் இயக்கம் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளது.