PSLV-C59 ராக்கெட் ,ஐரோப்பிய விண்வெளி மையத்தின் இரண்டு செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயந்தது.


வெற்றிக்கரமாக விண்ணில் பாய்ந்த PSLV: 


நேற்று  மாலை 4.08 நிமிடத்தில் ஏவ திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இன்று மாலை 4.04 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், திட்டமிட்டபடி, வெற்றிகரமாக இன்று விண்ணில் பாய்ந்தது PSLV-C59 ராக்கெட்.


PSLV-C59 ராக்கெட்டானது, ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் இருக்கும் ராக்கெட் ஏவுதளமான சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து, ராக்கெட் ஏவப்பட்டது. 


 






ப்ரோபா-3  விண்கலம்:


ஐரோப்பிய விண்வெளி மையத்தின் புரோபா-3  விண்கலமானது, 2 விண்கலங்களைக் கொண்டுள்ளது. கரோனாகிராஃப் ஸ்பேஸ் கிராப்ட்  மற்றும் ஓகல்டர் ஸ்பேஸ் கிராஃப்ட்  ஆகிய இரண்டு விண்கலங்களும் ஒன்றாக அடுக்கப்பட்ட கட்டமைப்பில் ஏவப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. 




இந்நிலையில், ராக்கெட் ஏவப்பட்ட 18வது நிமிடத்தில், ப்ரோபா விண்கலன்களானது வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோளானது, நீள்வட்டப்பாதையில் பூமியை சுற்றிவரும்.


பூமியிலிருந்து குறைந்தபட்சமாக சுமார் 600 கி.மீ தொலைவிலும், அதிகபட்சமாக 60,530 கி.மீ தொலைவிலும் சுற்றி வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



பணி என்ன?


புரோபா-3 விண்கலத்தின் முக்கிய பணியானது, சூரியனின் வளிமண்டலம் குறித்து ஆராய்ச்சி செய்வதாகவும். இதன் மூலம் சூரிய வளிமண்டலத்தில் மிக அதிக வெப்பம் ஏன் இருக்கிறது என்பது குறித்தும் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படும் என தகவல் தெரிவிக்கின்றன. இதன் மூலம் சூரிய புயல்கள் குறித்தும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும். இந்த திட்டமானது ஐரோப்பிய விண்வெளி மையத்தின் மிக நீண்ட கால திட்டமாகும். 


”பெருமைமிகு தருணம்”


இந்நிலையில் இதுகுறித்து இஸ்ரோ தெரிவித்ததாவது, “ PSLV-C59 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது , இஸ்ரோவின் தொழில்நுட்ப நிபுணத்துவத்துடன், ESA இன் அற்புதமான PROBA-3 செயற்கைக்கோள்களை விண்ணில் நிலைநிறுத்தியது.


” சர்வதேச ஒத்துழைப்புடன், இந்தியாவின் விண்வெளி சாதனைகளின் ஒருங்கிணைப்பைக் கொண்டாடும் பெருமைமிகு தருணம் இது “ என இஸ்ரோ தெரிவித்துள்ளது.