ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற திருகாளஹஸ்தி கோயில் அமைந்துள்ளது. திருப்பதி கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில் புகழ்பெற்ற சிவன் ஆலயமாக திகழ்கிறது.
இந்நிலையில், கோயிலின் வளாகத்தில், கோபுரத்தின் மீது ஒருவர் ஏறியதால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. மன நலம் பாதிக்கப்பட்ட அந்த நபர், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரமாக கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தி உள்ளார். ஒரு கட்டத்தில் கோபுரத்தின் மேலிருந்து குதிக்க முயன்றார்.
இதை படிக்க: ‛வாங்க என் செல்லங்களா...’ அப்பா உடன் அமெரிக்கா சென்று திரும்பிய மகன்களை வரவேற்ற ஐஸ்வர்யா!
கோயில் பாதுகாவலர்கள், அப்பகுதியினர், போலீசார் ஆகியோரின் பெரும் முயற்சிக்கு பின் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார். மன நல பாதிக்கப்பட்ட அந்த நபர், ஞாயிற்றுக்கிழமை மாலை கோபுரத்தின் உச்சியின் மேலிருந்து கீழே குதிக்க முயற்சித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தகவலறிந்து வந்த கோவில் பாதுகாவலர்கள் அவரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பத்திரமாக கீழே இறக்க முயன்றனர். அவரை மீட்ட பிறகு, அந்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், மன நலம் பாதிக்கப்பட்ட அந்த நபரின் பெயர் பிரகாஷ் என அடையாளம் காணப்பட்டது. அவரை போலீசார் திருகாளஹஸ்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோயில் கோபுரத்தின் மேலே மன நல பாதிக்கப்பட்டவர் ஏறியது எப்படி, அதுவரை கோயில் பாதுகாவலர்கள் என்ன செய்து கொண்டிருந்தனர், இச்சம்வபத்திற்கு கோயில் நிர்வாகம் காரணமா என பல கேள்விகள் எழுந்துள்ளன.
இதை படிக்க மிஸ் பண்ணாதீங்க: Agnipath Recruitment: அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து பல்வேறு வழக்குகள்: நாளை உச்ச நீதிமன்றம் விசாரணை
நல்வாய்ப்பாக, அந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். மீட்கபடாத பட்சத்தில், அந்த நபருக்கு ஏதேனும் நேர்ந்திருந்தால் கோயில் நிர்வாகமே பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர். எதிர்காலத்தில், இது போன்ற சம்பவம் நடைபெறாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த கோயில் மட்டும் இன்றி, அனைத்து முக்கிய கோயில்களிலும் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்