உரிய விதிகள் வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி விளம்பரங்களுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று நெல்லை அய்யா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார். சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாததால் பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு ரிசர்வ் வங்கிக்கு எச்சரிக்கை விடுத்திருந்தநிலையில் அதிக வட்டி தருவதாக கூறி கேரளாவில் 100 கோடி வரை மோசம் செய்ததாகவும், 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மனுதாரர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நெல்லை அய்யா தொடர்ந்த இந்த வழக்கு அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
கிரிப்டோ கரன்சி என்றால் என்ன?
கிரிப்டோ கரன்சி என்பது டிஜிட்டல் தளத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளை பெற உதவும் பணமாக செயல்படுகிறது. ஒரு சில நிறுவனங்கள் தங்களின் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு பணமாக கிரிப்டோகரன்சியை பெற்று கொள்ள சம்மதித்துள்ளனர். இதனால் அந்த விஷயங்கள் இது மிகவும் பயனளிக்கிறது. மேலும் இந்த கரன்சியை ஒரு பங்குகளை போல் நீங்கள் மற்றவர்களிடம் விற்க மற்றும் வாங்கவும் முடியும். கிரிப்டோகரன்சிகளை முதலில் டாலர் கொண்டு வாங்க முடியும். குறிப்பாக பிட்காயின் கரன்சியை டாலர் வைத்து வாங்கலாம். இதர கிரிப்டோ கரன்சிகளை பிட்காயின் வைத்து வாங்கலாம். முதலில் கிரிப்டோ கரன்சி வாங்க இணையத்தில் வாலெட் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
கிரிப்டோ கரன்சி எப்படி செயல்படுகிறது?
கிரிப்டோ கரன்சி பிளாக்செயின் தொழில்நுட்பத்தின் வாயிலாக செயல்படுகிறது. கிரிப்டோ கரன்சியின் ஒவ்வொரு பரிவர்த்தனைகளும் ஒரு பொது ரிஜிஸ்டரில் பதிவுசெய்யப்படும். ஒரு கிரிப்டோ கரன்சி உருவாக்கப்பட்டால், அத்துடன் சேர்ந்து நௌன்ஸ், கிரிப்டோ ஹஸ் உள்ளிட்டவையும் சேர்த்து உருவாக்கப்படும். இவை ஒவ்வொரு கிரிப்டோ கரன்சியுடனும் இருக்கும். இது பொது ரிஜிஸ்டரை பயன்படுத்துவதால் இதில் அதிக வெளிப்படைத்தன்மை உள்ளது. அதாவது யாரை வாங்குகிறார்கள், யார் விற்கிறார்கள் என்று அனைவரும் அறிந்து கொள்ள முடியும். இந்த தொழில்நுட்பத்திற்கு சற்று ஒட்டிய மாதிரி இருப்பது தான் கூகுள் டாக்ஸ். கூகுள் டாக்ஸ் பிளாக்செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என்றாலும் அது இயங்கும் முறை பிளாக்செயின் முறை போல கிட்டத்தட்ட இருக்கும்.
அதாவது ஒரு கூகுள் டாக்ஸ் ஃபைலை நாம் மற்றவர்களுக்கு ஷேர் செய்யும்போது, அதை அனைவரும் ஒரே சமயத்தில் மாற்றமுடியும். அந்த மாற்றங்கள் அனைத்தும் ஃபைலில் தெரியும். நாம் அனுப்புவது உண்மையான ஃபையில் தானே தவிர அதின் நகல் அல்ல. அதேமாதிரி தான் பிளாக்செயின் தொழில்நுட்பமும். ஆனால் பிளாக்செயின் தொழில்நுட்பத்தில் கிரிப்டோகிராஃபி என்ற பாதுகாப்பு விதிகள் கூடுதலாக இருப்பதால் இது சற்று வேறு மாதிரியாக இயங்கும்.
உலகில் தற்போது எவ்வளவு கிரிப்டோகரன்சி உள்ளது?
உலகில் தற்போது 6700 கிரிப்டோ கரன்சி புழக்கத்தில் உள்ளன. இவற்றின் மொத்த சந்தை மதிப்பு 2.2 டிரில்லியன் டாலர்களுக்கு மேல் இருக்கும். இவற்றில் முக்கியமான கிரிப்டோகரன்சி பிட்காயின்தான். ஏனென்றால் அதன் மதிப்பு மட்டும் 1.2 ட்ரில்லியன் டாலர்களாக உள்ளது.
- டாப்-5 கிரிப்டோ கரன்சி:
- பிட்காயின்- 1.2 டிரில்லியன் டாலர்
- ஈதரியம்-234 பில்லியன் டாலர்
- பினான்ஸ் காயின்- 87 பில்லியன் டாலர்
- எக்ஸ்.ஆர்.பி - 81 பில்லியன் டாலர்
- டீதர் - 45.4 பில்லியன் டாலர்
கிரிப்டோகரன்சி ஏன் பிரபலமாக உள்ளது?
கிரிப்டோ கரன்சி உலகளவில் மிகவும் பிரபலமாக ஒரு சில காரணங்கள் உள்ளன. அவை
- பிட்காயின் கரன்சியை எதிர்காலத்தில் இருக்க போகும் முக்கியமான க்ரிப்டோகரன்சியாக பல நாட்டினர் கருதுகின்றனர். அதனால் அதன் விலை மதிப்பு அதிகரிப்பதற்குள் பலர் தற்போது வாங்கி அடுக்கிக்கொண்டு வருகின்றனர்.
- இந்த விதமான கரன்சியில் எந்த நாட்டின் ரிசர்வ் வங்கியும் தலையிடாது என்பதால் இதன் மதிப்பை பணவீக்கம் வந்தால் குறைக்கமுடியாது.
- இது பிளாக் செயின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதால் மிகவும் பாதுகாப்பாக டிஜிட்டல் பரிவர்த்தனைகளை செய்ய முடியும் என்று கருதுகின்றனர்.
- கிரிப்டோகரன்சி எந்தவித வட்டியும் இல்லாமல் மதிப்பு உயர்வதால் அதனை பிற்காலத்தில் ஒரு பெரிய கரன்சியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வாய்ப்பு உள்ளது என்று கருதி சிலர் வாங்குகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்