தில்லியில் 1.40 லட்சம் புதிய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். ஆம் ஆத்மி அரசு அமைந்த பிறகு மொத்தம் 2.75 சிசிடிவி கேமராக்களை பொருத்தியுள்ளது. இந்த கேமராக்கள் பொருத்தப்பட்ட பிறகு, ஒவ்வொரு மைலிலும் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதில் டெல்லி இப்போது லண்டன், நியூயார்க், சிங்கப்பூர் மற்றும் பாரிஸை விட முன்னிலையில் இருக்கும். இரண்டாம் கட்டமாக 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படுகிறது. இந்த கேமராக்களை பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவுகின்றனர். ஒவ்வொரு மைலிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் விஷயத்தில் 150 நகரங்களில் டெல்லி முதலிடத்தில் இருப்பதாக அவர் கூறினார். டெல்லியில் சென்னையை விட 8 மடங்கு சிசிடிவி கேமராவும், மும்பையை விட 11 மடங்கு சிசிடிவி கேமராவும் உள்ளன.






இதுகுறித்து டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: "டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்து 2.75 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டமாக 1.40 லட்சம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும். கணக்கெடுப்புகளின்படி, சதுர மைல் அளவில் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ள உலகில் உள்ள 150 நகரங்களில் டெல்லி முதலிடத்தில் உள்ளது. டெல்லியில் ஒரு சதுர மைலுக்கு 1826 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. லண்டன் 2வது இடத்தில் இருக்கின்றது. இங்கு ஒரு சதுர மைலுக்கு 1138 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. சிங்கப்பூர் மற்றும் பாரிஸை விட டெல்லி மிகவும் முன்னேறியுள்ளது. சென்னையை காட்டிலும் மூன்று மடங்கும், மும்பையை காட்டிலும் 11 மடங்கு அதிகமாகவும் டெல்லியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஒரு சதுர கிலோமீட்டருக்கு அதிகபட்ச சிசிடிவி கேமராக்கள் உள்ள 150 நகரங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதில் டெல்லி முதல் நகரமாக உள்ளது." என்று பெருமிதம் கொண்டார்.



மேலும், "கடந்த ஏழு ஆண்டுகளில் டெல்லி முழுவதும் 2,75,000 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவை தெருக்கள், பாதைகள், காலனிகள், RWS, பள்ளிகள் மற்றும் பிற இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவில், சிசிடிவி கேமராக்களின் அடிப்படையில் சென்னை இரண்டாவது இடத்தில் உள்ளது. மேலும், மும்பையை விட டெல்லியில் மூன்று மடங்கு கேமராக்கள் உள்ளன.  சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டதில் இருந்து பெண்களுக்கான பாதுகாப்பு மேம்பட்டுள்ளது என்றார். குற்றச் சம்பவங்கள் பெரும்பாலும் சிசிடிவி கேமராக்களில் பதிவாகிவிடுவதால், குற்றச் சம்பவங்களைத் தீர்ப்பதில் போலீஸாருக்கும் உதவியாக உள்ளது. டெல்லியில் மேலும் 1,40,000 கேமராக்களை நாங்கள் பொறுத்தவுள்ளோம். இதைத் தொடர்ந்து, டெல்லியில் 4,15,000 சிசிடிவி கேமராக்கள் இருக்கும்” என்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.