மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் பேராசிரியர் ஒருவர் கல்லூரி முதல்வரை அடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. பேராசிரியர் அறைவதற்கு முன்பும், அவர் மீது ஒரு புத்தகத்தை வீசுவதற்கு முன்பும், பேராசிரியர் அவரிடம் வாய் தகராறு செய்ததைக் காணலாம். பேராசிரியர் மீது முதல்வர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
தானாக முன்வந்து காயப்படுத்துதல், ஆபாசமான செயல்கள் அல்லது வார்த்தைகள் மற்றும் கிரிமினல் மிரட்டல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் பேராசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர், பிரம்ஹதீப் அலுனே என அடையாளம் காணப்பட்டுள்ளார். உஜ்ஜயினியில் உள்ள கட்டியாவில் உள்ள அரசு கல்லூரியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
கடந்த ஜனவரி 15ஆம் கல்லூரியின் முதல்வர் டாக்டர் சேகர் மேடம்வாரை, பேராசிரியர் அலுனே தாக்கப்பட்டதைக் காட்டும் சிசிடிவி பதிவு இணையத்தில் வைரலானதை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
சம்பவம் குறித்து முதல்வர் கூறுகையில், “பேராசிரியர் போபாலில் இருந்து உஜ்ஜைன் கல்லூரிக்கு மாற்றப்பட்டார். கல்லூரிக்கு வந்த பிறகு, பேராசிரியர் தினமும் 5 கி.மீ., நடந்து செல்கிறார். எங்களுக்கு ஏற்கனவே பணியாளர்கள் குறைவு. ஜனவரி 15ம் தேதி கல்லூரி தடுப்பூசி மையமாக மாற்றப்பட்டது. அதைப் பற்றி பேச நான் அவரை அழைத்தேன். ஆனால் அவர் கோபமடைந்து என்னைத் திட்டித் தாக்கத் தொடங்கினார்” என்று கூறினார்.
பேராசிரியர் கூறுகையில், “அனைத்து ஊழியர்களிடமும் முதல்வர் மோசமாக நடந்து கொண்டார். அவர் பதவியில் இருந்த காலத்தில், மூன்று பேர் முன்கூட்டிய ஓய்வு பெற்றுள்ளனர். அவர் அனைத்து ஊழியர்களிடமும் தவறாக நடந்து கொண்டார். அவர் என்னை அவரது அறைக்கு அழைத்து அவதூறான வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இது சண்டைக்கு வழிவகுத்தது" என்று குற்றம் சாட்டினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்